பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 97 இக் கருத்துக்கு அரண்செய்கின்ற முறையில் பரதனைப்பற்றி விசுவாமித்திரன் கூறும், "தள்ள அரிய பெரு நீதித் தனி ஆறு புக மண்டும் பள்ளம்" - (657) எனும் சொற்கள் அமைந்துள்ளன. அது முற்றிலும் பொருத்த மானது என்பதை நாம் அறிய முடிகின்றது. அத்தகைய ஒரு சிறப்பை அயோத்தியா காண்டத்தில் வைத்துக் காட்டிவிடுகின் றான் கவிச்சக்கரவர்த்தி கம்பநாடன், - இந்தப் பாத்திரங்கள் தவிர, இலக்குவனையும் ஒரளவு உணர்ந்துகொள்வதற்கு அயோத்தியா காண்டம் பெரிதும் உதவுகின்றது . . . . . பட்டம் இராமனுக்கு இல்லை என்றபோது, இலக்குவன் கொண்ட சீற்றம், துடிக்கின்ற துடிப்பு, எப்படியாவது பரதனையும், கைகேயியையும் வென்று பட்டத்தை இராமனுக்கு வாங்கித் தருகிறேன் என்று அவன் செய்கின்ற ஆர்ப்பாட்டம், அதன் எதிரே இராகவன் அவனைச் சமாதானப்படுத்த முயல்வது எல்லாவற்றையும் அயோத்தியா காண்டத்தில் காண்கிறோம். ൾ "நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை அற்றே நியின் பிழை அன்று :பந்து நமைப் புரந்தாள் மதியின் பிழை அன்று மகன் பிழை அன்று மைந்த! விதியின் பிழை நீ இதற்கு என்னை வெகுண்டது?" . . . (1734) ஐய! கைகேயி, பரதன் இருவரும் எந்தவிதமான பிழையும் செய்யவில்லை. விதியின் விளையாட்டு இது என்று இராகவன் சொல்கின்றான். அப்போதும்கூட இராகவனுக்கு எதிரே இலக்குவன் பேசுகின்றான். . . . . . . . . . . . . . . . . ... ." "விதிக்கும் விதியாகும் என் வில் தொழில் காண்டி"

  • , , , , (735) என்று. இதைக் கேட்டு, என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றான் இராகவன். -

7