பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 கம்பன் எடுத்த முத்துக்கள் இராமானுஜனாகிய இலக்குவன்பற்றி இராமன் என்ன நினைக்கிறான் என்பதை அயோத்தியா காண்டத்தில் நன்கு அறியமுடிகிறது. - - எப்படிப் பார்த்தாலும் இராம காதையின் கரு முழுவதும் அயோத்தியா காண்டத்தில் அடங்கியிருக்கிறது என்பதும், அதில் வருகின்ற பாத்திரங்கள் அனைத்தும் ஈடு இணையற்ற முறையில் படைக்கப்பட் டுள்ளன என்பதும் காணக் கிடக்கின்றன. - - . இந்தக் காண்டத்திலேயே உயிர்நீத்துவிடுகின்ற தசரதன், தன் செயலை முடித்துக்கொண்டு மறைந்துவிடுகின்ற கூனி, யாரும் எதிர்பாராத முறையில் புதிய திருப்பங்களை உண்டாக்கி உலகம் முழுவதும் பழி சொல்லும் என அறிந்: திருந்தும், பழிகளை எல்லாம் வாங்கித் தோளில் போட்டுக் கோண்டு தான் எது நியாயம் என்று நினைத்தாளோ அந்த நியாயத்திற்காகப் போராடி இறுதிவரை கல்தூண்போல் நிற்கின்ற ஞானியாகிய கைகேயி, அவள் மைந்தனாய் ஆயிரம் இராமனுடைய வளர்ச்சியை அடைகின்ற பரதன், அன்பின் வடிவாக இருக்கின்ற குகன் ஆகிய பாத்திரங்களை யெல்லாம் காண்பதற்கு அயோத்தியா காண்டம் உதவுகிறது. மந்திரப் படலத்தில் தொடங்கி, திருவடி சூட்டு படலத் தில் முடிகின்ற அயோத்தியா கால டய கபபலுeயடய பேராற்றலுக்கு ஒப்பற்ற எடுத்துக்காட்டாக இருப்பதையும், பாத்திரப் படைப்பில் உலகக் காப்பியங்களுள், இப்படிப் பாத்திரப் படைப்பைச் செய்தவர் யாரும் இல்லை என்று சொல்லத்தக்க அளவில் பாத்திரங்களைக் கவிச்சக்கரவர்த்தி அமைத்திருக்கிறான் என்பதையும் அறியும்போது அயோத்தியா காண்டம் உண்மையிலேயே ஆறு காண்டங். களில் மிகச் சிறந்த ஒரு காண்டம் என்பதை உணர முடிகின்றது. -