பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 103 வர பலம் என்று எடுத்துக்கொண்டால், இம்முனிவர்கள் இவ்வரக்கர்களின் வர பலத்திற்குச் சமமாகவோ அன்றி அதிகமாகவோ கூடப் பெற்றிருக்கின்றனர். என்றாலும், அவ்வரத்தைப் பயன்படுத்தித் தம் பகைவர்களை அழிக்க விரும்ப வில்லை. பகைவர்களே யாயினும் . ஒயாமல் தமக்குத் தீங்கிழைப்பவர்களேயாயினும் அவர்களுடன் மாறுபட்டுப் போரிடுவதிலும் சாபமிடுவதிலும் தம் ஆற்றலைச் செலவழிக்க அப் பெருமக்கள் விரும்பவில்லை. அவர்களுடைய புலனடக்கமும் தவ பலமும் பிறர் செய்யும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளவும் மனத்தில் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் இருக்கவும் பயன்பட்டன. எனவே, எக்காரணத்தைக் கொண்டும் தம்மால் முடியுமேனும் தமக்குத் தீங்கிழைக்கும் அரக்கர்களை அவர்கள் ஒடுக்க முன்வரவில்லை. மேலும் ஒருவரை அழித்தல் என்பது முத்தொழிலை உடைய பரம்பொருளுக்கு உரியதே தவிர மனிதர்க ளாகிய தமக்கு அவ்வுரிமை இல்லையென அப் பெருமக்கள் கருதினர். அன்றியும், அகங்கார, மமகாரங்களை (யான், எனது அறவே ஒழித்த அவர்கள், யார்மேலும் வெறுப்போ சினமோ கொள்ளுவதில்லை. எந்த இறைவனிடத்தில் தம்மை ஒப்படைத்தார்களோ அந்த இறைவனுடைய ஆணைக்குக் கட்டுப்பட்டு விருப்பு வெறுப் பின்றி வாழ்தலே தம் கடமை என இவர்கள் எண்ணினர். இதனாலேயே இவர்கள் துயர் துடைக்க இறைவன் அருள் பெற்ற பலர் பல காலங்களில் தோன்றி அவனிட்ட பணியை நிறைவேற்றுகின்றனர். பகைவர்களின் வர வலிமைக்கேற்ற முறையில் இறைவன் ஒரு சிலரை அனுப்பியோ அன்றித் தானே இவ்வுலகிடைப் பிறந்தோ இவர்களை அழிக்க வேண்டியுள்ளது. - - இறைவன் இச்சா மாத்திரத்தில் ஆக்கல், காத்தல், அழித்தல், ஆகிய முத்தொழிலையும் செய்கிறான். எனினும் கர துடணர்கள் இராவணன் ஆகியோரை அழிக்கத் தானே அவதாரம் எடுக்கவேண்டி யுள்ளது. ஆழ்ந்து நோக்கினால் இதற்குரிய காரணங்களையும் அறிந்துகொள்ள முடியும். இரணியன், இராவணன் போன்றவர்கள் எல்லையற்ற வர