பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.க.ஞானசம்பந்தன் 109 இப் பிறவிக் கடல் கடந்தேன்; இனிப் பிறவேன்; இருவினையும் துப்பு உறழும் நீர்த்த சுடர்த் திருவடியால், துடைத்தாய் நீ” - - (2576) என்ற பாடலால் விளக்குகிறான். - விராதனைப் பொறுத்தமட்டில் வேதங்களைக் கற்று அறிவின் துணை கொண்டு, உயிர்கள் யாவை, இவ்வுயிர்களுக்கும் பரம்பொருளுக்கும் உள்ள தொடர்பு யாது என்று ஆராய்ந்து ஞானத்தைப் பெற்றவன் அல்லன். பக்தியின் அடிப்படையில் இறைவனுடைய செளலப்பியத்தையே துணையாகக் கொண்டு வீடு பெற்றவன் ஆவான் எனலாம். எனவே, இவனை ஞானி என்று கூற முடியாது. விராதன் என்ற பெயரில் அரக்கனாக வாழ்ந்தபொழுது பிற உயிர்களைக் கொன்று தின்பதையே தொழிலாகக் கொண்டவன் இவன். அப்படியிருக்க அப்பிறப்பிலிருந்து உடனே வீடு பெற்றான் என்றால், அந்த இழிபிறப்பு உடம்புக்கே திருவடி சம்பந்தம் கிடைத்தது என்றால், இது எப்படிப் பொருந்தும்? இந்த அரக்க உடம்பில் போவதன் முன் பரம்பொருளிடம் எல்லை யற்ற பக்தி உடையவனாக அவன் இருந்திருத்தல் வேண்டும். எனவே, எவ்வித நெறிமுறைகளுக்கும் கட்டுப்படாமல் இழி பிறவி எய்தினும் இறைவனின் இணையடிகளை மறவாத மனம் ஒன்றுமாத்திரம் இருப்பின் அவர்கட்கும் வீடுபேறு உண்டு என்பது இந்நாட்டின் பழைய கொள்கை ஆகும். தமிழர் கண்ட பக்தி மார்க்கத்திற்கு எடுத்துக்காட்டுகளாகக் குகனையும், விராதனையும் கவிஞன் எடுத்துக்கூறுகிறான். குற்றம் ஒன்றும் புரியாத குகன், கொலைத் தொழிலில் ஈடுபட்ட விராதன், வேட்டைத் தொழிலையே தொழிலாகக் கொண்ட கண்ணப்பன் ஆகியோர் இந்நாட்டவர் பெரிதெனப் போற்றிய பக்தி மார்க்கத்திற்கு எடுத்துக்காட்டாவர். "ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள்"