பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

廿0 கம்பன் எடுத்த முத்துக்கள் என்பது (5-91-3) நாவுக்கரசர் பெருமானுடைய திருவாக்காகும். இவ்வடிக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவன் சரபங்க முனிவன் ஆவான். பல்லாண்டுகள் வேதம் முதலிய நூல்கள் பயின்று, மாபெரும் தவங்களைச் செய்து, உண்மைப் பொருளைத் தன் அறிவின் துணைகொண்டு அறிந்தவன் சரபங்கன். அவனது தவத்தை மெச்சிய இந்திரன் அவன் ஆசிரமத்திற்கு வந்து அவனை வணங்கி "ஐயனே, இந்திர லோகமும் அதற்கும் மேம்பட்ட பிரமலோகமும் உன்னை வரவேற்கக் காத்திருக்கின்றன; வருக” என்று வேண்டுகிறான். இவ்வாறு இந்திரன் வேண்டுகிற அதே நேரத்தில் சரபங்க னுடைய ஆசிரமத்தின் வெளியே இராம இலக்குவர்கள் நிற்கின்றனர். அதனைத் தன் ஞானத்தால் உணர்ந்து சரபங்கன் “எனக்கு வரவேண்டிய வீடுபேற்றை அளிப்பவன் வெளியே நிற்கின்றான். நீ தர வேண்டிய பதங்கள் எனக்குத் தேவை யில்லை" என்று பேசுகிறான். அதே நேரத்தில், வீடுபேற்றின் இலக்கணத்தைக் கீழ்வரும் பாடலில் அற்புதமாக எடுத்து விளக்குகிறான். "சிறு காலை இலா, நிலையோ திரியா, குறுகா, நெடுகா, குணம் வேறுபடா, உறு கால் கிளர் பூதம் எலாம் உகினும் மறுகா, நெறி எய்துவென்; வான் உடையாய்” (2606) சரபங்கன் ஆசிரமத்தை விட்டு வெளியே வந்த இந்திரன் இராமனை இன்னான் என்று அறிந்துகொண்டு 2610 முதல் 2517 வரை உள்ள எட்டுப் பாடல்களில் பரம்பொருளின் தன்மையைப் பேசுகிறான். ஆயிரம் யாகங்கள் செய்து இந்திரப் பெரும்பதத்தில் இருக்கும் அவனும் விராதனைப் போலவே முரண்பாட்டில் முழுமுதலைக் காண்கிறான். அவ்வெட்டுப் பாடல்களுள் ஈடுஇணையற்று விளங்குவது. "மேவாதவர் இல்லை, மேவினரும் இல்லை; வெளியோடு இருள் இல்லை, மேல் கீழும் இல்லை; மூவாதமை இல்லை, மூத்தமையும் இல்லை; முதல் இடையோடு ஈறு இல்லை, முன்னொடு பின் . . . . . இல்லை;