பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 、甘 தேவா! இங்கு இவ்வோ நின் தொன்று நிலை என்றால், சிலை ஏந்தி வந்து, எம்மைச் சேவடிகள் நோவக் காவாது ஒழியின், பழி பெரிதோ? அன்றே: கருங் கடலில் கண்வளராய்! கைம்மாறும் உண்டோ?" (2614) என்ற பாடலாகும். விராதன், இந்திரன் ஆகியோர் பாடிய இவ்விரு துதி களிலும் நம்மை வியக்க வைக்கும் செய்தியும் உண்டு. அரக்க வடிவிலிருந்து திருவடி சம்பந்தம் பெற்ற விராதன் வீடுபேற்றை அடைகிறான். முழு ஞானியாகிய சரபங்கனோ வீடுபேற்றின் இலக்கணத்தை மிக அற்புதமாக 2606 ஆம் பாடலில் கூறி, இந்திரப் பதத்தையும் பிரம லோகத்தையும் உதறிவிட்டு இராமனைத் தரிசித்து வீடுபேற்றை அடைகிறான். இவர்கள் இருவர்மட்டு மல்லாமல் இந்திரனும் இராமனைத் தரிசிக்கிறான். இவர்களைப் போலவே அவனும் இறை இலக்கணத்தைப் பேசுகிறான். என்றாலும், தான் பெற்ற இந்திரப் பதத்தை உதறிவிட்டு வீடுபேற்றை அடைய அவன் விரும்பவில்லை. கவிச்சக்கரவர்த்தி கம்பநாடன் இந்த இரண்டு படலங்களில் உபநிடதங்களைச் சாறாகப் பிழிந்து இந்நாட்டுக் கடவுட் கொள்கையையும் அதனுடன் குழைத்து ஏறத்தாழ 24 பாடல்களில் தந்துவிடுகிறான். அம்மட்டோடு இல்லாமல், குற்றமே குணமா வாழ்ந்த விராதன், மாபெரும் ஞானியின் வாழ்க்கை வாழ்ந்த சரபங்கன் ஆகிய இருவரும் வீடுபேற்றைப் ப்ெரிதென மதித்துப் பெறுத்லையும், தேவர்கோன் ஆகிய இந்திரன் இவர்களோடு ஒப்பிடுகையில் சிறியவனாக ஆகிவிடுதலையும் குறிப்பால் உணர்த்துகிறான். ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கம்பநாடனைப் பொறுத்தவரையில் இரண்டு பெரிய கொள்கைகளின் தாக்கத்திற்கு இலக்காயினான். கம்பனுக்கு முன்னர் இரண்டாயிரம் ஆண்டுகளாக இத்தமிழகத்தில் தோன்றி வளர்ந்து நிலைபெற்ற பக்தி இலக்கியத்தின் தாக்கம் ஒன்று. மற்றொன்று, உபநிடதங்களின் தாக்கம் ஆகும். சங்க காலத்திற்கு முன்னர்த் தொடங்கி, சங்க காலத்தில் ஒரளவு