பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அசஞானசம்பந்தன் 113 "கம்பமத யானைக் கழுத்தகத்தின் மேலிருந்து இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன்" - (நாலா, 681) "வாணாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம் கோனாகி விற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்" - ប៉ូល 683} இப்பாடல்களிலிருந்து பக்தி இயக்கத் தாக்கம் எட்டாம் நூற்றாண்டு அளவில் எத்தனை ஆழமாகப் பதிந்துள்ளது என்பதை அறியமுடிகிறது. இந்திரன், வருணன் முதலியவர்களை முன்னிட்டுப் பல வகையான வேள்விகளை இயற்றி, அவர்கள் பதத்தை அடைய வேண்டும் என்ற கருத்து ரிக்கு, யசுர் ஆகிய வேதங்களில் பரவலாகக் காணப்படுகிறது. அதன் மறுதலையாக இந்த இன்பங்கள் நிலைபேறுடையன அல்ல. எனவே நிலையே றுடைய மாறுபாடில்லாத வீட்டின்பத்தையே பெரிதெனக் கருதிப் போற்றும் கருத்து தமிழகத்தில் தொன்றுதொட்டு இருந்துவந்திருக்கிறது என்பதை முன்னர்க் கண்டோம். அதே நேரத்தில் முழுமுதற் பொருளைப் பற்றி இத் தமிழர்கள் கொண்ட கருத்தையும் உபநிடதங்கள் கூறும் கருத்தையும் ஒரளவு இணைத்து விராதன் வதையிலும், சாபங்கன் பிறப்பு நீங்கு படலத்திலும் விரிவாகக் கம்பநாடன் பேசுகிறான். உபநிடதங்களின் தாக்கம அவனை ஒரளவு பாதித்துள்ளது என்பதைப் பின்னர் யுத்த காண்டத்தில் வரும் இரணியன் வதைப் படலத்தில் 5249 முதல் 6.264 வரையுள்ள 1. பாடல்களில் பரக்கக் காணலாம். அறிவுக்கும், கற்பனைக்கும், சொல்லுக்கும் கடந்து நிற்கும் ஒரு பொருளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு துல்லியமான முறையில் அப்பொருளின் இலக்கணத்தை விாாதன், சரபங்கன் படலங்களில் கவிச்சக்கரவர்த்தி ைதுக் காட்டுகிறான். ஆயிரம் வருடங்களாகப் பெளராணிகர்களும், தமிழ்ப் புலவர்களும் கம்பனைப் படித்து, சொற்:ொழிவு செய்துவந்திருப்பினும் இந்தப் பதியில் அவர்கள் ஈடுபட்டார்கள் என்று கூற எவ்விதச் சான்றும் இல்லை, ஆனால், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கம்பளில் 8