பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 கம்பன் எடுத்த முத்துக்கள் ஈடுபட்டு அவனுடைய கடவுள் கொள்கையில் மனத்தைப் பறிகொடுத்த கவிச்சக்கரவர்த்தி பாரதி இப் பகுதியில் தன்னையே மறந்துவிடுகிறான், "தமிழச்சாதி” என்ற தலைப்புடன் முதலும் முடிவும் அழிந்துபோன நிலையில் உள்ள பாடலின் சிலவரிகள் கீழே தரப்பெற்றுள்ளன: "எல்லை யொன் றின்மை" யெனும்பொரு ளதனைக் கம்பன் குறிகளாற் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும், முன்பு நான்தமிழச் சாதியை யமரத் தன்மைவாய்ந்து வென்று உறுதி கொண் டிருந்தேன்." - - (பாரதி - இருதலைக்கொள்ளி 24-28) முன்னிரண்டு காண்டங்களைப் போல் அல்லாமல் ஆரணிய காண்டம் நம் கவனத்தை இழுத்துப்பிடித்து மேலே செல்ல ஓடாமல் தடுத்துவிடுகிறது. மூன்றாவதாக உள்ள அகத்தியப் படலம் இராகவ னுடைய வன வாழ்க்கையில் பத்தாண்டுகளை இரண்டொரு பாடல்களின் மூலம் நடத்திச்செல்கிறது. இராவணன் முதலியோருடன் தசரத குமாரன் போர் தொடுக்க வேண்டு மானால் அதற்கொரு காரணம் வேண்டும். இதுவரையில் அக்காரணம் வெளிப்படையாகப் பேசப்படவில்லை. அது மிக இன்றியமையாது தேவைப்படுதலின், கவிஞன் அகத்தியப் படலத்தில் அதற்குரிய நிலைக்களனை அமைக்கின்றான். பஞ்சவடியில் முனிவர்கள் பலரும் அரக்கரால் தாம் படும் துன்பத்தை விரிவாகக் கூறி அருளுடை வீர! நின் அபயம் யாம் என்றார் (2646) என்று பேசவைக்கிறான். கம்பன். அபயம் என்று அடைந்தவர்களை எப்படியும் காப்பது என் கடனாகும் என்று பேசிய கார்வண்ண மேனியான், வேந்தன் வீயவும், யாய்துயர்மேவவும் (2648) என்ற பாடலில் காட்டிற்கு வந்தது தான் செய்த புண்ணியம் என்று கூறுகிறான். அபயம் என்று வந்துவர்களைக் காப்பதுதான் அரசனாகப் பிறந்தவனின் தலையாய அறம் என்று கூறி, அரக்கர்களை அழித்துவிடுகிறேன் என்று உறுதி கூறுகிறான். இவ்வாறு தசரத குமாரன் உறுதி கூறும்பொழுது முனிவர்களின்