பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 கம்பன் எடுத்த முத்துக்கள் கொண்டாள். ஒருவன் இவ்வுவகில் பெற விரும்பும் பேறுகள் அனைத்தையும் பெற்று வாழ்பவன் இராவணன். அவனுடைய ஆசையைத் தூண்டுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அன்று. கூர்மையான அறிவு படைத்தவளாகிய சூர்ப்பணகை அண்ணனுடைய வாழ்வின் நொய்ம்மையான பகுதி (weak spot) எது என்பதை நன்கு அறிந்திருந்தாள். காமவெறி என்பதே அண்ணன் தங்கை இருவருக்கும் பொதுச் சொத்து. எனவே, அதனைக் கருவியாகக் கொண்டு இராவணனைத் தூண்டிவிட வேண்டும் என்ற முடிவிற்கு வந்தாள். அந்த முடிவுடன் இலங்கை சென்ற அவள், எடுத்த எடுப்பிலேயே சிதையைப் பற்றிச் சொன்னால், அவன் ஆசை தூண்டப் படுமோ படாதோ என்று சந்தேகிக்கிறாள். அதற்காக அவள் கையாளும் சூழ்ச்சி மிக அற்புதமானது. அண்ணனிடம் சென்று இழந்த மூக்கைக் காட்டினாள். சற்றும் அலட்டிக்கொள்ளாமல் இலங்கையர் கோன் யாவர் செயல் (315 என்றான். மானிடர் தடிந்தனர்கள் வாள் உருவி என்றாள் (31) விடையாக இராவணன் அதை நம்பத் தயாராக இல்லை. இவ்வளவு பெரிய அவமானம் கேவலம் இரண்டு மனிதர்களால் நடந்துவிட்டது என்பதை அறிந்தும் இராவணன் கொதித்தெழவில்லை. கர துடணர்களிடம் ஏன் உதவிக்குச் செல்லவில்ைைல என்ற வினாவைத் தங்கையிடம் கேட்கிறான். ஒரே வரியில், வில் ஒன்றில் கடிகை மூன்றில் ஏறினர் விண்ணில் என்றாள். (3130) இந்த விடை இராவணனை ஆழ்ந்த சிந்தனையுள் செலுத்திவிட்டது. கரன் முதலியோரையும் அவர்களுடைய ஆற்றலையும் நன்கு அறிந்தவன் இராவணன், அப்படியிருக்க மூன்று நாழிகையில் இரண்டே மனிதர்கள் கரன் முதலிய அனைவரையும் விண்ணில் ஏற்றினர் என்றால், இது நம்பக் கூடியதாக இல்லை, ஆனாலும், இதனை நேரில் பார்த்த தங்கை இதற்குச் சான்று பகர்கின்றாள். எனவே, இது மறுக்க முடியாத உண்மை யாகும். பகைவர் களாகிய இந்த இருவர் யார், எத்தகைய ஆற்றல் உடையவர்கள், மனிதர்களில் இத்தகையோர் இருக்க முடியுமா?, இவர்களை எப்படிச் சந்திப்பது, சமாளிப்பது என்ற நீண்ட யோசனையில் மூழ்கிய