பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அசஞானசம்பந்தன் #25 இராவணன், இவ்வளவு ஆற்றல் உடையவர்கள் யாதொரு காரணமுமின்றி ஒரு பெண்ணுக்கு இத்தகைய தீங்கு இழைத்திருக்க மாட்டார்கள். அந்தக் காரணத்தை அறிய வேண்டும்'என்றஎண்ணத்தினால்தான், இராவணேசுவர னாகிய தன்னுணடைய தங்கையை மானுடர் இருவர் மூக்கரிந்தார் என்றால், "அவர்களிடையே நீ செய்த குற்றம் யாது" (3/32) என்று வினவினான். இத்தகைய தண்டனை கிடைக்கவேண்டு மானால் அதற்குரிய குற்றத்தைத் தன் தங்கை இழைத்திருப்பாள் என்று கருதினான் இராவணன். இதுவரை ஒரு சிறந்த அரசன் எப்படி நடந்துகொள்ள வேண்டுமோ அப்படியே நடந்துகொள்கிறான் இராவணன், 'நீ இழைத்த குற்றம் யாது' என்ற வினாவைச் சூர்ப்பணகை எதிர்நோக்கியிருந்தாள், - உடனே பதின் மூன்று பாடல்களில் சீதையைப் பாதாதிகேசமாக வருணித்து இராவணன் மனத்தில் காமவெறி காட்டுத் இப்போல் பரவ வழி செய்துவிட்டு, இறுதியாக, "அன்னவள் தன்னை நின்பால் உய்ப்பல் என்று அணுகலுற்ற என்னை அவ் இராமன் தம்பி இடைப் புகுந்து, இலங்கு வாளால் முன்னை மூக்கு அரிந்து விட்டான் முடிந்தது என் - - வாழ்வும் உன்னின் சொன்ன பின் உயிரை நீப்பான் துணிந்தனென் என்னச் - - சொன்னாள். (3147) என்று கூறுவதன் மூலம் தன் எண்ணத்தை முடித்துக்கொண்டு விட்டாள். இனி எவ்விதத் துண்டுதலும் இல்லாமல் இராவணன் சிதையைச் கவர்வதும், இராமனுடன் போர் பரிவதும் நடைபெறும் என்று எதிர்பார்த்தாள். * * * கரனைப் போல இராவணன் முன்யோசனை இல்லாமல் எதனையும் செய்யத் தொடங்கமாட்டான் என்பதை அவள் நன்கு அறிந்திருந்தாலும் இராவணன் சூழ்ச்சி எந்தத் திசையில் செல்லும் என்பதை அவள் அறிய முடியவில்லை. தங்கை மூக்கினை அரிந்து அரக்கர் குலத்திற்கு