பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#26 கம்பன் எடுத்த முத்துக்கள் அவமானம் இழைத்தவர்களை அழிப்பதா அல்லது தங்கையால் புகழப்பெற்ற அப்பெண்ணைக் கவர்வதா - எது முதலில் செய்யப்படவேண்டியது என்ற வினாவிற்கு இராவணன் விடை காணமுடியால் தவிக்கிறான். குலமானம், காமவெறி என்ற இரண்டின் இடையே தடந்த போட்டியில் காமவெறி வென்றுவிட்டது. இந்நிலையில் இராவணன் மனத்தில் சீதையைக் கவர்ந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் வேரூன்றிவிட்டது. அவனுடைய மனநிலையை, கரனையும் மறந்தான்; தங்கை மூக்கினைக் கடிந்து நின்றான் உரனையும் மறந்தான் உற்ற பழியையும் மறந்தான் வெற்றி அரனையும் கொண்ட காமன் அம்பினால், முன்னைப் பெற்ற வரனையும் மறந்தான் கேட்ட மங்கையை மறந்திலாதான் (3149) என்ற பாடலால் கவிஞன் அற்புதமாக விளக்குகிறான். இந்த நிலையில் கேவலம் இரண்டு மனிதர்களை மட்டும் காவலாகக் கொண்டுள்ள அப்பெண்ணை (சீதையை) சென்று கவர வேண்டியதுதானே? அதை ஏன் இராவணன் செய்யவில்லை; அதற்கொரு தக்க காரணமும் உண்டு. 'ஆயிரம் மறைப்பொருள் உணர்ந்து அறிவு அமைந்தவன்.(6.18) ஆகிய இராவணன் தங்கையிடம் கேள்விப்பட்ட செய்திகளில் ஒரு செய்தி அவனுடைய மனத்தை மிகவும் கலக்கிவிட்டது. கரன் முதலியோரின் பலத்தை நன்கு அறிந்த இராவணன், அவர்கள் அனைவரும் அம்மானுடர் இருவரில் ஒருவனாலேயே வெல்லப்பட்டனர் என்றால், இத்தகையதொரு அதிசயத்தை இதுவரை அவன் கேள்விப் பட்டதில்லை; கற்பனைகூடச் செய்துபார்த்தது இல்லை. அத்தகைய இருவரின் காவலிலுள்ள ஒருத்தியைக் கவரவேண்டுமானால் தன் ஆற்றல்ைப் பயன்படுத்திப் போரிட்டுக் கவர்வது என்பது இயலக் கூடிய காரியமா என்ற ஐயம் அவனுடைய ஆழ்மனத்தில் நிலைபெறத்