பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128. கம்பன் எடுத்த முத்துக்கள் கொள்கிறான். இப்படலத்தின் பெயர் இராவணன் சூழ்ச்சிப் படலம் என்று இருந்தாலும், இராவணனுடைய உண்மையை சூழ்ச்சி மாரீசன் வதைப் படலத்தோடு முடிந்துவிடுகிறது. அடுத்து வரும் சடாயு உயிர் நீத்த படலத்தில், சடாயு தந்தையின் இடத்தில் இருந்த மைந்தனாகிய இராமன் சினத்தைத் தணித்தது மிகச் சிறந்த பகுதியாகும். பிராட்டியைக் கொண்டு சென்றவன் யார் என்பதைக் கூறுவதற்கு முன்னர் அவன் ஆவி பிரிந்துவிடுகிறது. அபயம் என்று கூவி அழுத ஒர் அபலைப் பெண்ணுக்காக மாபெரும் தலைவனுடன் போரிட்டு உயிர் நீத்த காரணத்தால் பரம்பொருளின் கைகளால் நீர்க்கடன் பெறுகின்ற வாய்ப்பைப் பெறுகின்றான், சடாயு, பெற்று வளர்த்த தந்தையாகிய தசரதனுக்கு, தந்தை உரிமைபற்றிக் கிடைக்க வேண்டிய இந்தச் சிறப்புக் கிடைக்கவில்லை. அதுமட்டு மல்ல, " எண்ண அரிய குணத்தாலும் எழிலாலும் இவ் இருந்த வள்ளலையே அணைய்" (657) பரதனாலும்கூட நீர்க்கடன் பெறவில்லை. தசரதன் என்பதை நினைக்கும்பொழுது, "வகுத்தான் வகுத்த வகையல்லால்" என்ற குறள் நினைவிற்கு வருகின்றது. இராம காதைதயில் இராமாவதாரம் எடுத்த பரம்பொருளின் கையினால் நீர்க்கடன் செய்யப்பெறும் பேறும் தந்தை முதலாகிய எந்த மனிதருக்கும் கிட்டவில்லை; எங்கோ காட்டில் வாழ்ந்த பறவைக்குக் கிடைத்தது என்றால், இறைவனுடைய கருணை எங்கு, எப்பொழுது, யாரிடம் பாய்கிறது என்பதைச் சொல்லமுடியாது என்பதை அறிந்துகொள்கிறோம். w - அடுத்துள்ள அயோமுகிப் படலத்தில் இலக்குவனுடைய பண்பாட்டின் சிறப்பை அறிய ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. விசுவாமித்திரனுடைய ஆணையைச் சிரமேற் கொண்டு தாடகைமேல் அம்பு செலுத்தி அவளைக் கொன்றான் இராகவன், இப்பொழுது அயோமுகி என்ற பெண் அரக்கியைக் கொல்லாமல் மூக்கரிந்து அவளிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்கிறான் இலக்குவன். அவள் அரற்றிய சத்தத்தைக் கேட்ட இராகவன், பின் தன் தம்பியிடம் நிகழ்ந்தது யாது' என்று கேட்கிறான். அடுத்துப் "போர்வல்