பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் #29 அரக்கியைக் கொன்றிலை போலுமால்' (3630) என்று இராகவன் கேட்க, துளைபடு மூக்கொடு செவி துமித்து உக, வளை எயிறு இதழொடு அரிந்து, மாற்றிய அளவையில், பூசலிட்டு அரற்றினாள். (3631) என்று விடையிறுத்தான். இங்கே இளையவன் இரு கை கூப்பியதற்கு ஒரு காரணம் உண்டு. கொன்றிலை போலுமால்' என்ற அண்ணன் வினாவிற்குத் தம்பி விடையிறுக்கத் துணியவில்லை. உண்மையான விடையைக் கூறுவதாக இருப்பின் அரக்கியேயாயினும் அவள் பெண் என்றகாரணத்தால் கொல்லாமல் விட்டு விட்டேன் என்று கூறியிருக்க வேண்டும். அப்படிக் கூறியிருப்பின் தாடகை வதம் செய்த அண்ணனைச் சுட்டிக் காட்டுவது போல் இருக்கும். தான் வழிபடும் தெய்வமாகிய இராகவன் எதிரே அதனைச் சொல்லத் துணியாமல் 'அன்பு கூர்ந்து மேலே ஒன்றும் கேட்க வேண்டாம் என்று கூறுபவன் போல இளையவன் இரு கை கூப்டனான். தம்பியின் பண்பாட்டினை அறிந்துகொண்டு பெரு மகிழ்வுற்ற இராகவன் அவனை இறுகத் தழுவிக் கொண்டு மனுநெறி தவறாதவனே என்று வாழ்த்துகிறான். இதனைக்கூற வந்த கவிஞன் மிக அற்புதமாக, அண்ண்ன் தம்பி இருவரிடையே நடைபெற்ற நாடகத்தையே பின்வரும் பாடலில் காட்டுகிறான். r - " தொல் இருள், தனைக் கொலத் தொடர்கின்றாளையும் கொல்லலை; நாசியைக் கொய்து நீக்கினாய். - "வல்லை நீ; மனு முதல் மரபினோய்! என, புல்லினன் உவகையின் பொருமி விம்முவான்" (3632) அடுத்து வருவது கவந்தன் படலமாகும். இதுவரை கண்ட பகுதிகளில் இராம இலக்குவர்கள் தனித்த .ே போரிட்ட நிகழ்ச்சியைக் கண்டோம். தமையன் தம்பி. இருவரும் கூட்டு ஒருவரையும் வேண்டாத கொற்றவர்கள் என்பது உண்மைதான். என்றாலும், பின்னே நிகழப்போகும் பெரும்போரில் இருவரும் சேர்ந்து பணியாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகப் போகிறது. எனவே, இருவரும் ஒன்றாக 9.