பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 கம்பன் எடுத்த முத்துக்கள் சமநிலையிலும் மீறி வளரத் தொடங்கினால் இறையருள் அதைத் தடுத்து நிறுத்திச் சமநிலைக்குக் கொண்டுவருவதை ஆரணிய காண்டத்தில் காண்கிறோம். சரபங்கன், அகத்தியன், சவரி போன்ற நல்லோர்களும், கரன் துடணன் சூர்ப்பணகை போன்ற தீயவர்களும் இக்காட்டிடை வாழ்கின்றனர். கரன் முதலியோர் தாங்கள் செய்கின்ற தவற்றை உணராமலேயே மேலும் பாவம் செய்கின்றனர். விராதன், கவந்தன் முதலியோர் தாம் செய்த பிழைக்குத் தண்டனை பெற்றுத் தண்டனையின் பின்னே நல்லோர் ஆகின்றனர். மாரீசன் போன்றோர் நல்லது எது என்பதை நன்கு அறிந்திருந்தும் தீமையைத் தடுத்து நிறுத்த ஆற்றலின்மையின் வேண்டாவெறுப்புடன் வேறு வழியின்மையின் தீமைக்குத் துணை போகின்றனர். இன்றைய சமுதாயத்தில் வாழும் நம்மில் பலர் மாரீசனுடைய நிலையில்தான் இருக்கின்றோம். காப்பிய மாந்தரில் மனித சமுதாயம் பிரதிபலிக்கப்படுகிறது என்பது ஆரணிய் காண்டத்தில் நன்கு அறியப்படுகிறது. .