பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 131 சவரியும் திருவடி தரிசனம் பெற்ற பிறகு பிறப்பு நீங்குகின்றனர். அறிவின் துணை கொண்டு ஞானம் அடைந்த சரபங்கனும், உணர்வின் துணை கொண்டு பக்தையாக மாறிய சவரியும் ஒரே வீடுபேற்றை அடைகின்றனர். இது, இத்தமிழ் நாட்டின் தனிப்பெருங் கொள்கையாகும்? கவந்தன், சவரி இருவரும் சகோதரர்களைச் சுக்கிரீவனிடம் போகுமாறு பரிந்துரை செய்ததில் ஒரு துணுக்கம் இருப்பதை அறிய வேண்டும். பிறன்மனை நயந்தவனாகிய இலங்கை வேந்தனைத் தண்டிக்கப்போகின்ற இராகவன், அதே குற்றத்தைச் செய்த வாலியைச் சந்திக்கவோ, நட்புக் கொள்ளவோ கூடாது. கிட்கிந்தைச் சமுதாயத்தை முன்பின் அறியாத இச்சகோதரர் வாலியைச் சந்திக்க நேர்ந்தால் அவன் அந்தரங்க வாழ்க்கையின் ரகசியம் தெரியாமல் அவனிடம் நட்புச் செய்யலாம். வாலியின் வாலுக்குக் கட்டுப்பட்டவன் இராவணன். ஆதலின் போர் நிகழாமலேயே சீதை விடுவிக்கப்படலாம். இவற்றையெல்லாம் உள்ளடக்கித்தான் சுக்கிரீவனிடம் செல்லுமாறு கவந்தனும் சவரியும் பரிந்துரை செய்கின்றனர். ஆரணிய காண்டத்தின் பதின்மூன்று படலங்களில் முதற் படலமாகிய விராதன் வதையும் பன்னிரண்டாவது படலமாகிய கவந்தன் வதைப் படலமும் குற்றத்தைச் செய்து தண்டனை அனுபவித்தவர்க்கு விடுதலை நல்கியதைக் காட்டும். ஒரு பிறப்பிலிருந்து மற்றோர் உயர்ந்த பிறப்பிற்கு இராகவன் இவர்களை அனுப்பியதைக் காட்டும். இரண்டாவது, பதின்மூன்றாவது படலங்கள் ஞானம், பக்தி ஆகியவைகளில் முதிர்ந்து நிற்பவர்களுக்கு இறையருள் தேடி வந்து வீடு நல்கும் என்று அறிவுறுத்தும், பகுதிகளாகும். காப்பிய வளர்ச்சிக்கு மிக முக்கியமான இரண்டாவது திருப்பு மையத்தைத் தன்னிடையே கொண்டு விளங்குவது ஆரணிய காண்டமாகும். உலகத்தில் காட்டுப் பகுதியாயினும், நாட்டுப் பகுதியாயினும் நல்லவர், அல்லவர் இருவருமே வாழ்கின்றனர். இந்த இரு கூட்டத்தாரிடையேயும் ஒரு சமநிலை இருந்துவருகிறது. ஏதாவது ஒன்று தன்