பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்:அகஞானசம்பந்தன் 137 இந்த நிலையில், வாலியின் குணநலத்தைக் காட்ட விரும்புகிறான் கவிச்சக்கரவர்த்தி, அவனைப்பற்றி அனுமன் தந்த தகவல்கள் ஒரு சார்பு (biased conclusion பற்றியன. அதனை அப்படியே நம்பித்தான் இராகவன் போருக்குத் துணிகிறான். அதை நாமும் அப்படியே ஏற்றுக்கொண்டு விட்டால், வாலி என்ற பாத்திரப் படைப்பை நன்கு அறிய முடியாமல் போய்விடும். எனவேதான், வாலி வதைப் படலத்தின் முற்பகுதியில் வாலி - தாரை உடையாடலைப் புகுத்துகிறான் கம்பன். வந்திருக்கின்றவர் வலிய துணைவர் என்ற அளவில்தான் தாரை இராம இலக்குவர்களைப்பற்றி அறிந்திருந்தாள். மேலும், இராமன் என்பவனைப்பற்றித் தன் கணவனுக்கு ஒன்றும் தெரியாது என்ற கருத்தில்தான் அவள் பேசுகிறான். ஆனால், வாலியோ இராமனுடைய வரலாற்றை மிக நன்றாக அறிந்திருந்தான். இராகவனுடைய பண்புநலன்களைத் துல்லியமாக எடை போட்டு அறிந்திருந்தான் என்பதை (3965 முதல் 3969 வரை) ஐந்து பாடல்களில் நாம் அறிகிறோம். சுக்கிரீவனுக்குத்துணையாக இராகவன் வந்துள்ளான் என்று அவள் கூறியும், இராகவனைப் பற்றி இவ்வளவு உயர்வாக வாலி பேசுகிறான் என்றால், அவனுடைய குணாதிசயங்க்ளை விளக்க இப்பாடல்கள் போதுமானவை யாகும். * . - தன் மார்பில் அம்பு வந்து தைத்தபோதுகூட், அது இறைவனின் சூலமோ, முருகனின் வேலோ என்று ஐயுறுகிறானே தவிர, அந்த நேரத்தில்கூட இராகவனை அவன் நினைக்கவில்லை. தன் மார்பை துளைத்துச் செல்ல முற்படும் அம்பை வாலின்ாலும் கைகளினாலும் பற்றிப் பிடித்து வெளியே இழுத்து, அதில் பொறிக்கப்பட்ட பெயரை அறிய முற்படுகிறான் வாலி. அம்பை நிறுத்தி ஓரளவு வெளியே இழுத்து அதில் பொறிக்கப்பட்ட செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களில் தெரியக் கண்டான் (40.13). கண்களில் கண்டான்' என்று கூறினாலே போதுமானது என்பதை விட்டுத் தெரிய' என்ற ச்ொல்லைக் கவிச்சக்கரவர்த்தி வேண்டுமென்றே பயன்படுத்துகிறான். 'இராகவன் பெயரை அம்பில் எதிர்பார்க்காத வாலிக்கு