பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 . கம்பன் எடுத்த முத்துக்கள் வேறுநின்று ஏ விடத் துணிந்து என் கருத்து இது என்ற பகுதி வாலி வதையின் அடித்தளத்தை நன்கு விளக்கப் பயன்படும். சுக்கிரீவனைப் பார்த்து, வாலியை வலியச் சென்று போருக்கு அழைப்பாயாக என்று கூறுகின்ற அதே நேரத்தில், தான் எவ்வாறு போர் செய்து வாலியைக் கொல்ல வேண்டும் என்ற திட்டத்தையும் (Strategy) இராமன் வகுத்துக் கொண்டான். மறைந்து நின்றுதான் அம்பு எய்யப் போகிறேன் (ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு நான் கண்ட முடிபாகும் இது வென்று பேசுகிறான். வேறு, நின்று என்ற சொற்கள் மறைவாக நின்று என்பதையும் 'ஏ (அம்பை) விடத் துணிந்தது (எய்ய முடிவு செய்துவிட்டேன்) என்ற சொற்கள் நீண்ட சிந்தனைக்குப் பிறகு இராகவன் கொண்ட முடிவு என்பதையும் காட்டும். இவ்வழியைத் தவிர வேறு வழியில் வாலியைக் கொல்ல இயலாது. வாலி இறந்தால் ஒழிய இராவண வதம் தடையின்றி நடைபெற இயலாது. எனவே, இம்முடிவுக்கு இராகவன் வருகிறான். ஒரு பெரு நன்மையை முடிக்க வேண்டிய இடத்தில் சிறு தவறுகளைச் செய்துதான் அந்த நன்மையை விளைவிக்க முடியும் என்ற நிலை ஏற்படும்பொழுது, அத்தவறுகளைச் செய்வது நியாயமேயாகும். இப்பாடலை இவ்வளவு விரிவாகக் காண்பதற்கு ஒரு காரணம் உண்டு. அதனைப் பின்னர்க் காணலாம். - - - மூலநூலின்படி, வாலி வலிமை பெற்றவனாயினும், வரங்கள் பெற்றவனாயினும் சாதாரணக் குரங்காகவே பேசப்படுகிறான். கம்பநாடனைப் பொறுத்தமட்டிலும், வாலி வதை பல சிக்கல்களை உண்டாக்கிவிடுகிறது. அறத்தின் மூர்த்தியாகிய இராகவன் வாலியைக் கொன்றால் ஒழிய, முனிவரிடம் வாக்குக் கொடுத்தபடி இராவணனைக் கொல்ல முடியாது. எனவே, வாலியைக் கொன்றே தீர வேண்டும். மரபுப்படி வாலியோடு போர் செய்வது என்பது இயலாத காரியம். இரண்டு தீமைகளுள் குறைந்த தீமையை gripiš@sirsirert Gsusirų uġigirsĩ (choosethelesserevil) srsirp முடிவுக்கு இராகவன் வந்துவிட்டான் என்பதைத்தான் வேறு நின்று ஏ விடத் துணிந்தது என்ற அவன் சொற்கள் வெளிக்காட்டுகின்றன. -