பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 135 இதனாலேயே, தொடக்கத்திலேயே கிட்கிந்தைப் படலம் சிறப்புப் பெறுகிறது. இக்காண்டம் பம்பைவாவிப் படலத்தில் தொடங்கி மயேந்திரப் படலம் முடியப் பதினாறு படலங்களைக் கொண்டுள்ளது. இக்காண்டத்தில்தான் ஈடு இணையற்ற வீரனும், பாற்கடலைத் தன் இரு கைகளால் கடைந்தவனும், இராவணனை வாலில் கட்டி எட்டுத் திக்குகளிலும் சென்றவனும், அட்டன்ஜர்த்தி தாள் பணிபவனும், இராமபாணத்தின் செயலைத் தடுத்து நிறுத்தும் ஆற்றலனும் ஆகிய வாலியை முழுவதுமாகக் காண்கிறோம். வாவி வதைப் படலம் ஏழாவது படலமாக அமைந்துள்ளது. வாலியின் வரலாற்றை முழுவதும் அறிந்துகொள்ளாமல் போரில் இறங்கினால் இராகவனும் அல்லற்பட நேரிடும். எனவே, பகைவலிமையை இராகவன் நன்கு அறிந்துகொள்ள வேண்டும் என்ற கருத்தில் சொல்லின் செல்வனாகிய அனுமன் (3821 முதல் 3834 முடிய) பதினான்கு பாடல்களில் வாலியின் வரலாற்றை விரிவாகக் கூறுகிறான். இதனை மனத்துள் வாங்கிக்கொண்ட இராகவன், வாலியின் எதிரே சென்று போர் புரிதல் பயன் விளைக்காது என்பதை நன்கு அறிந்துகொள்கிறான். நீண்ட யோசனைக்குப் பிறகு, சுக்கிரீவனைப் பார்த்து "நீ சென்று வாலியைப் போருக்கு வலிய அழைத்து அவனிடம் போரிடுக. அப்பொழுது நான் மறைந்திருந்து அம்பு தொடுத்து வாலியைக் கொல்வேன். இதுவே, என்னுடைய முடிவாகும்" என்று கூறுகிறான். இப்பாடல் ஆழ்ந்து சிந்தித்துப் பொருள் கூற வேண்டிய ஒன்றாகும். அப்பாடல் வருமாறு: - அவ் இடத்து, இராமன், நிலுழைத்து, வாலி ஆனது ஒர். வெல் விடத்தின் வந்துபோர் விளைக்கும் ஏல்வை, வேறு . . . - நின்று எவ்விடத் துணிந்து அமைந்தது என் கருத்து இது . . . . எனறான; தெவ் அடக்கும் வென்றியானும், நன்று இது என்று - சிந்தியா. 3944) இப்பாடலில், இரண்டு, மூன்றாம் அடிகளில் வரும்