பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்,அ.ச.ஞானசம்பந்தன் 139 விண்ணிலிருந்து மண்ணில் வீழ்ந்துவிட்டது போன்ற ஒரு வீழ்ச்சி என்று நினைக்கிறான். அதனாலேயே, "சொல் அறம் துறந்திலாத சூரியன் மரபும், தொல்லை நல் அறம் துறந்தது" என்று நினைக்கின்றான். இந்த இடத்தில் ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் சீசர் என்ற நாடகத்தில் சீசரின் இறப்புப் பற்றிப் பேசுகின்ற ஆன்ட்டணியின் ஒரு தொடர் ஒப்பு நோக்கத்தக்க தாகும். "What a fall was there, my countrymen When the great Ceaser fell, you and I and all of us fell சொல் அறம் துறந்திலாத சூரியன் மரபில் வந்த நம்பியாகிய இராகவன் வில் அறம் துறந்தான் என்ற எண்ணம் தோன்றிய அளவில் வாலியின் மனத்தில் பகைமையோ காழ்ப்புணர்ச்சியோ சினமோ தோன்றவில்லை. அவற்றின் எதிராக நகைப்பும் நாணமும் தோன்றின; கவிக்கூற்றாக வருவது இப்பாடல். வாலியை எடை போட இப்பாடலைப் பயன்படுத்துகிறான் கவிஞன். இந்நிலையில் இராகவன் எதிரே வருகின்றான். வாலி அவனைக் காண்கின்றான். வாலியினுடைய கண்கள், புற மனம் ஆகியவை இராமனை இகழ்ந்து காண்கின்றன. ஆனால், அவனுடைய அக மனம் அக்காட்சியில் லயித்து எங்கோ செல்கிறது. அகமனம் கண்ட காட்சியைத்தான், கவிஞன் கண்ணுற்றான் வாலி, நீலக் கார்முகில் கமலம் பூத்து மண் உற்று, வரிவில் ஏந்தி, வருவதே போலும் (4016) என்ற அடிகளில் கூறுகிறான். செம்மைசேர் நாமத்தைக் கண்களில் தெரியக் கண்ட தற்கும், இப்பொழுது மண்ணுற்று வரிவில் ஏந்தி வருகின்ற வடிவத்தை அக மனம் கண்டதற்கும் ஒரு தொடர்புண்டு. மந்திரங்கட்கு வடிவம் உண்டு என்று மந்திரநூலார் கூறுவர். ரீராம என்ற தாரக மந்திரத்தை வரிவடிவமாக முதலில் காண்கிறான் வாலி. அந்தப் பெயர் அவனுடைய புற மனத்தில் இகழ்ச்சி, நாணம் என்பவற்றை