பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 கம்பன் எடுத்த முத்துக்கள் உண்டாக்கிய்து உண்மைதான். ஆனால், அதே நேரத்தில் அந்த மந்திரம் அவனது அக மனத்தில் புகுந்து வேலை செய்யத் தொடங்கியது. இராமன் எதிரே வந்து தோன்றியவுடன் அக மனம் ராம என்னும் மந்திரத்தின் பரு வடிவம் எவ்வாறு இருக்கும் என்பதை அறிவிப்பதுபோல அவ்வடிவம் காட்சி அளித்தது. "நீலக் கார்முகில், கமலம் பூத்து, மண்ணுற்று, வரிவில் ஏந்தி வருவதே போலும்" என்ற சொற்களை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். நீல நிறம், சிவப்பு நிறம் என்ற இரண்டும் ஆதியான நிறங்கள் (primary colours) ஆகும். இவை இரண்டும் மூலப்பரம்பொருளை அறிவுறுத்தும் அடையாளங்கள் ஆகும். வரிவில் என்பது பேராற்றலை அறிவுறுத்தும் அடையாளம் ஆகும். எனவே, இராம என்ற சொல்லைக் கண்ணிற் கண்ட பிறகு, வாலி காணும் காட்சி அம்மந்திரத்தின் வடிவம்போல் உள்ள நீலம், சிவப்பு என்ற நிறங்களின் கூட்டமும் பேராற்றலின் வடிவமே ஆகும். இராமன் என்ற தசரதகுமாரனைக் கண்டான் என்று கூறாமல், 'கார்முகில் கமலம் பூத்து வரிவில் ஏந்தி மண்ணுற்றது என்று கம்பன் கூறும்பொழுது ஒரு நாமம், ஒருருவம் இல்லாத பரம் பொருளைக் குறிக்க மனித வடிவத்தையே விட்டுவிட்டுக் கமலம் பூத்த கார்முகில் என்றும், அக்கார்முகில் வில் ஏந்தி மண் உற்றது என்றும், இராம என்ற சொல்லின் சொரூபம் இதுதான் என்றும் வாலி புரிந்துகொண்டான் என்று கூறவந்த கம்பன், நம்மையும் ஒரளவு புரிந்துகொள்ளுமாறு செய்கிறான். இந்த நிலை வாலிக்கு எவ்வாறு வந்தது என்ற வினாத் தோன்றுவது இயல்பேயாகும். வாலியைத் தவிர ஏனையோர் இதற்கு விடை கூறுவது இயலாது. எனவே, அந்த அனுபவத்தில் திளைத்த வாலி இம்மனநிலை தனக்கு வந்த காரணத்தையும் போகிற போக்கில் உணர்த்துகிறான். ஒர் உயிருக்கு இறை அனுபவம் கிட்டவேண்டுமே யானால், இறைவன் நேரடியாகவோ, குருமுகமாகவோ வந்துதான் அதனை தரமுடியும். அப்படி வருகின்ற நேரத்திலும் தீட்சை என்ற ஒரு முறையைக் கையாள்வர். இது ஸ்பரிச தீட்சை, நயன தீட்சை, திருவடி தீட்சை என்று பலவகைப்படும். இந்த உபதேசம் பெற்ற பிறகு, பெற்றவர்கள் மனநிலையில் மாபெரும்