பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.க.ஞானசம்பந்தன் 34; மாற்றங்கள் தோன்றி இறையனுபவம் கிட்டும், அதன்பிறகு, அவர்கள் காட்சியே மாறிவிடும். அதற்கு முன்னர் அவர்கள் கண்டவை, கேட்டவை அனைத்தும் புதிய பொருளைத் தரும். வாலியைப் பொறுத்தமட்டில், கார்முகில் கமலம் பூத்து வரிவில் ஏந்தி மண் உற்று இராமா என்ற மந்திரத்தை வாலிக்கு உபதேசம் செய்தது, முற்கூறிய ஸ்பரிஸ், நயன திட்சை முறைகளை மேற்கொள்ளாமல் அவனுடைய மார்பில் அம்பைச் செலுத்தி உபதேசம், செய்யும் புதிய முறையைக் கையாண்டது புதிய முறையாகும். இதனை நன்கு உணர்ந்துகொண்ட வாலி, இராமனிடம் பேசும்போது, ஏவுகூர் வாளியால் எய்து, நாய் அடினேன் ஆவி போம் வேலைவாய், அறிவு தந்து அருளினாய் (4063 என்று கூறுகிறான். . . . . . . இப்பாடலில் உள்ள ஆவியோம் வேலைவாய் என்ற சொற்களையும் ஏவுகூர் வாளியால் அறிவு தந்து அருணினாய்’ என்ற சொற்களையும் கவனிக்க வேண்டும். இதுவரையில் தன் மருமத்திடை இராமன் தன் அம்பைச் செலுத்திக் கொல்ல முனைத்தான் எனவும் அதுவும் மறைந்திருந்து இதனைச் செய்தான் எனவும் பல பாடல்களில் இராமனைக் கடுமையாகச் சாடியுள்ளான் வாலி. ஆனால், இப்பொழுது இராமன் அம்பால் தான் சாகவில்லை என்பதை நன்கு உணர்ந்துகொண்ட காரணத்தால் ஆவிபோகின்ற வேளையில் வாளியால் அறிவு தந்தாய்' என்று பேசுகிறான். அம்புதான் கொன்றது என்று நினைத்திருந்தால் ஆவி போக்கும் வேலைவாய் என்று சொல்லியிருக்க வேண்டும். அதற்கு மாறாக, ஆவி போம் வேலை என்று கூறுகிறான். இவ்உலகை விட்டுப் போக வேண்டிய நேர்ம் வந்துவிட்ட காரணத்தால் என் ஆவி போகின்றது. இதற்கு இராமன் எய்த அம்பு காரணம் அன்று என்பதை ஆவிபேனம் வேலைவாய்ன என்ற சொற்களால் நன்கு தெரியப்படுத்திவிடுகிறான். அப்படியானால் இராமன். எய்த அம்பு என்ன செய்தது: இராகவன் ஏவிய கூர்வாளி அறிவு (பர ஞானம் தந்து அருளியது. அருளினாய் என்ற சொல்லை. அவன்