பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i42 கம்பன் எடுத்த முத்துக்கள் பயன்படுத்தும்போது "கண்ணுற்றான் வாலி" என்ற பாடலில் காணப்படும் வாலிக்கும் இப்பாடலில் காணப்படும் வாலிக்கும், மலைக்கும் மடுவுக்கும் இடையே காணப்படும் வேற்றுமையை அறியலாம். "ஏவுகூர் வாளியால் ஆவிபோம் வேலைவாய் அறிவு தந்து அருளினாய்” என்ற சொற்றொடர்களை வாய்விட்டு உரக்கப் படித்தால் - பலமுறை படித்தால் - அத்தொடரில் மறைந்துள்ள ஓர் உணர்ச்சி வெளிப்படக் காணலாம். ஆழ்ந்த வருத்தம் அல்லது ஏக்கம் இத்தொடரில் தொனிப்பதை உணரவும் அறியவும்-முடியும். மனம் முற்றிலும் மாறி, விருப்பு வெறுப்பற்ற மிக உயர்ந்த நிலையை - ஸ்திதப் பிரக்ஞை மனநிலையை - அடைந்தபிறகு வாலி பேசும் வார்த்தைகள் இவை. இந்த மனநிலையை அடைந்தவிட்ட ஒருவன் எப்படி ஏக்கத்தோடு பேசமுடியும் என்ற வினாத் தோன்றுவது இயல்பே. சம திருஷ்டி நிலையை வாலி அடைந்துவிட்டான் என்பதைக் கவிஞன் இங்கே, எப்போது, எவ்வாறு செரிவிக்கிறான்? அறிவு தந்து அருளினாய் என்ற வாலியின் கூற்று முற்றிலும் உண்மையானதே என்பதை இச்சொல்லை அடுத்து வரும், - "மூவர் நீ! முதல்வன் நீ! முற்றும் நீ! மற்றும் நீ! - பாவம் நீ! தருமம் நீ பகையும் நீ! உறவும் நீ!" (4063) என்ற அடிகள் மூலம் நிலைநாட்டுகிறான். இந்நிலையை அனுபவ ரீதியில் அடைந்த ஒருவன் எப்படி ஏக்கத்தோடு பேச முடியும்? என்றாலும், இப்பாடலின் முன்னிரண்டு அடிகளில் ஒர் ஏக்கம் தொனிப்பது மறுக்க முடியாததாகும். அந்த ஏக்கம் எதுவாக இருக்கும் என்று ஆராயத் தொடங்கினால், விடை காண்பது எளிது, 'அறிவு தந்து அருளினாயீ என்ற சொற்களில் தன் தகுதியைப் பாராது அறிவை (பர ஞானத்தைத் தன் கருணை காரணமாகத்தான் இறைவன் அளித்தான் என்று சொல்கிறான். இதில் ஏக்கம் எங்கே வந்தது? இந்தப் பரஞானத்தைப் பெற்ற பிறகு-அதாவது சம திருஷ்டி, விருப்பு வெறுப்பற்ற நிலை பெற்ற பிறகு ஒரு மனிதன் இவ்வுலகில் உள்ள பொருள்களையும் நிகழ்ச்சிகளையும் காண்பானேயானால், அக்காட்சி முற்றிலும்