பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 கம்பன் எடுத்த முத்துக்கள் பகுதிகளாகப் பிரித்து அவற்றிலுள்ள அருமைப்பாட்டை ஆராயலாம். அயோத்தியா காண்டம்: அயோத்தியா காண்டத்தில் பாத்திரங்கள் என்று சொல்லப்படுபவை மிகக் குறைவானவே யாகும். தசரதன், கூனி, கைகேயி, பரதன் என்ற நான்கு பாத்திரங்கள்தாம் இக் காண்டம் முழுவதும் அடைத்துக் கொண்டிருக் கின்றன. இடையில் 'குகன் வருகின்றான். அவனும் மிக முக்கியமான பாத்திரம்தான் என்பதில் ஐயமில்லை. ஆக, இந்த ஐந்த பாத்திரங்களை மட்டும் வைத்துக் கொண்டு மிகப் அயோத்தியா காண்டம் நடைபெறுகிறது. ஆரணிய காண்ட்ம்: .....பதின் மூன்று. படலங்களைப் பெற்றுள்ளது, இக் காண்டம். தொடக்கம், முடிவு ஆகிய இரு படலங்களும் இராகவனுடைய அம்பு, கருணை நிறைந்த கண் ஆகிய இரண்டும் பட்டு முறையே விராதனும் சவரியும் பிறப்பு நீங்குகின்றனர். என்பதை அறிவிப்பன. : . . காப்பியம் என்ற முறையில் பார்த்தால், காப்பிய வளர்ச்சிக்கு இரண்டாவது திருப்புமுனை இக் காண்டத்தின் நடுநாயக மாக அமைந்துள்ளதைக் காணலாம். கிட்கிந்த்ாகாண்டம்.பம்பை வாவிப் படலம் தொடங்கி மயேந்திரப் படலம் முடியப் பதினாறு படலங்களைக் கொண்டுள்ளது. . இக் காண்டத்தில்தான் .... வாலியை