பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 11 அ.ச.ஞா.வின் புதிய நூல் இந்தப் புதிய நூலின் பெரும்பான்மையான செய்திகள் முன்பே தமிழ் ஆர்வலர்கள் அறிந்தனவே. ஆம், கோவைக் கம்பன் அறநிலை வெளியிட்டுவரும் கம்பராமாயண உரைப் பதிப்பில் வெளியாகியுள்ள காண் . வாரியான முன்னுரைகளின் தொகுப்பே இந்த நூல். எனினும், ஒரே நூலாக வெளியிடும்போது சில மாற்றங்கள், சேர்க்கைகள் இடம் பெற்றுள்ளன. நூலின் அமைப்பு முன்னுரை என்ற பெயரிலே - கம்பன் - எடுத்த முத்துக்கள் என்ற பெயரிலே கம்ப ராமாயணக் கதைச் சுருக்கத்தை எதிர்பார்க்க வேண்டா. இது கம்ப ராமாயண வசன நூல் அன்று. * . முழுக் காப்பியத்துக்குமான ஆராய்ச்சி நூலும் அன்று. திறனாய்வுக் கூறுகளின் பல்வேறு அணுகுமுறையில் ஆராய்ச்சி செய்வதென்றால் பல நூறு, ஏன், பல்லாயிரம் பக்கங்கள் வேண்டும்; படிக்கும் நேயர்களுக்கு மிகுந்த பொறுமையும் வேண்டும். கம்பரின் காவியத்தின் உருவக் கட்டமைப்பினைப் புலப்படுத்துவதோடு, ஒவ்வொரு காண்டத்திலும் இடம் பெற்றுள்ள உயிர்நாடியான கூறுகளை ஆய்வு முறையில் புலப்படுத்துகிறார், பேராசிரியர் அ.சஞா. நூலினுள் ஆறு காண்டங்களைப் பற்றி அ.சஞா. தந்துள்ள வாக்கியங்கள் இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளன. நிதானமாகப் படித்துப்பார்த்தால், நூலின் அமைப்பைப் புரிந்துக் கொள்ளலாம். . பாலகாண்டம் : "பாலகாண்டம் என்ற பொதுத்தன்மையுடைய பகுதி போக, ஆற்றுப் படலத்தில் தொடங்கிப் பரசுராமப் படலம் ாறாக 23 படலங்களாக வகுக்கப்பட்டுள்ளது. இப் பட்டங்கள் மூன்று அல்லது நான்கு