பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 கம்பன் எடுத்த முத்துக்கள் தமிழ் முனிவர் திரு.வி.க.வின் கணிப்பு இன்றளவும் சரியாகவே இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டவே இதனை இங்கே கூறினேன். . . இந்த முன்னுரை . x நூலுக்குப் பாயிரம் வழங்கும் உரிமை தகுதியால் மூத்தோர்க்கும் சமநிலையோர்க்கும் மட்டுமன்றி இளையோ ராகிய மாணாக்கர்க்கும் உண்டு என நன்னூல் (5). குறிப்பிடுகிறது. ஆனால், மாணாக்கர்க்கு அந்த உரிமை வழங்கிய ஆசிரியன்மார்களை விரல்விட்டு எண்ணி விடலாம். மற்றவர்கள் மற்றும் மாற்றவர்கள் கருத்துகளைப் பொறுமையொடு கேட்டுக்கொள்ளும் பழக்கம் உள்ளவர் அ.ச.ஞா. அந்தப் பழக்கம் இன்றளவும் அவரை விட்டு நீங்காமையால் அவருடைய மாணாக்கனாகிய என்னை ஒரு முன்னுரை எழுதுமாறு கேட்டார். அவர் கேட்டுவிட்டார் என்ற பெருமையிலேயே தோய்ந்து, அந்த மிதப்பிலேயே இதனை எழுதுகிறேன். இந்த முன்னுரை, நூலின் திறனாய்வு அன்று நூலை அறிமுகப்படுத்துவதோடு அமைந்துவிடும். திசைகாட்டும் கம்பத்தில் ஊர்ப் பெயர் மட்டுமே இருக்கும்; ஊர் இராது. திரைப்படப் பாடல்கள் கொண்ட புத்தகத்தில் கதைச் சுருக்கம் இருக்கும். அச் சுருக்கத்தின் கடைசியில் - கதையை முடிக்காமலேயே மற்றவை எம் வெள்ளித் திரையில் காண்க என்று எழுதியிருப்பார்கள். நூலை முழுவதாகவும் முறையாகவும் படிக்குமாறு துாண்டிவிட்டால் இந்த முன்னுரையின் நோக்கம் நிறைவெய்தியதாகும். ஆங்காங்கேசில செய்திகளை மட்டுமே இம் முன்னுரை சுட்டிக் காட்டும். 3, . . . . .x . . .