பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் - 9 தமிழ் முனிவர் கணிப்பு “ஞானசம்பந்தர் புரட்சி மனப்பான்மை யுடையவர். அவர் இப்பொழுது பச்சையப்பன் கல்லூரியிலே தமிழ்ப் பேராசிரியராய் இருக்கிறார். அவர்தம் மனப்பான்மை அவ்வளவில் நிற்குமா என்று ஐயுறுகிறேன். சம்பந்தர் நாட்டுக்குப் பேராசிரியராகுங் காலம் வரலாம்; வரல் வேண்டுமென்பது எனது வேட்கை, எரிமலை வாளா கிடக்குமோ? அஃது என்றாதல் ஒருநாள் தழல் உமிழ்ந்தே தீரும்" - திரு.வி.க. 1944ல் தம் வாழ்க்கைக் குறிப்புக்களில் தந்த குறிப்பு இது. . . . . - எரிமலை வாளா கிடக்கவில்லை. திரு.வி.கவே இனம் கண்டு பின்னே 1947ல் எடுத்துக்காட்டினார்; 'கம்பர் பெருமானைப் பெளராணிக ஆட்சி சிறைப்படுத்தியது!.. கம்பர் இந்நாளில் விடுதலை அடைந்தது கண்டு மகிழ்வெய்துகிறேன்! அவ் விடுதலை நல்கிய தோழர் சரவண ஞானசம்பந்தர்க்கு எனது வாழ்த்து உரியதாகுக!” இராவணனைக் கொடியவனாக மட்டுமே காட்டிவந்த மேடைகளில், மேற்கு நாட்டுத் திறனாய்வு நோக்கில் அவன் மாட்சியை நிலைநாட்டி அவல வீரனாக அறிமுகப் படுத்தினார் அ.சஞா. கட்டுப்பெட்டித்தனமான கணிப்புகளை உடைத்தெறிந்து பொசுக்கியது, அ.ச.ஞா.வின் எரிமலை மனப்பான்மை. - - - - திறனாய்வுச் செம்மலின் புரட்சி இன்னமும் . எண்பதாண்டு நிறைவுற்றிருக்கிற இந்த 1996ஆம் ஆண்டிலும் - வீறு குறையாமல் விடைத்தே நிற்கிறது. : கைகேயியை மாசற்ற மாபெருந் தியாகியாக அச்ஞா. காண்கிறார். . ...” . - பழகிப்போன மரபு வழியிலே கைகேயியைப் பரதனைப் போலவே பழிவளர்க்கும் செவிலியாகவே காண்பதிலும் காட்டுவதிலும் திளைக்கின்றவர்களுக்கு இந்நூலில் வரும் கைகேயி திகைப்பூட்டுவாள் திகைப்பு மேலும் மேலும் திடுக்கிட வைக்கும். - விவரத்தை மேலே - நூலுள் காணலாம்.