பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 . கம்பன் எடுத்த முத்துக்கள் . மாணவன் முன்னுரை மரா.போ. குருசாமி முன்னும், இனிப் பின்னும் தமிழ்ச் செம்மல் பேராசிரியர் அ.சஞா. இதற்கு முன்னரும் கம்பராமாயணம் தொடர்பான நூல்கள் பல எழுதியுள்ளார். மீண்டும் அவர் வாயிலாகக் கம்ப்ன் எடுத்த முத்துக்கள் என்ற இந்த நூல் வெளிவருகிறது. இது ஏன்? எந்தச் சூழ்நிலையில் உருவாகியிருக்கிறது? இந்த வினாவுக்கு உரிய விளக்கம் நூலாசிரியர் முன்னுரையிலே காணப்படுகிறது. என்ன்ைப் பொறுத்தவரையில் கவிச்சக்கரவர்த்தியின் ப்டைப்பிலே மீண்டும் பல புதிய செய்திகளை அசஞா. கண்டிருப்பதால் இந்த நூல் உருவாயிற்று என்றே கொள்கிறேன். நவில்தொறும் நூல் நயம் என்பதற்கு இந்நூலின் தோற்றம் எடுத்துக்காட்டாகும். ஒரு காலைக்கு ஒருகால நயம் மிகும் என்று பரிமேலழகர் எழுதியுள்ள நுட்பம் இங்கே நினையத்தக்கது.அதனால்தான்.கம்பநாடன் கவிதையிற்போல் - ஆற்றோர்க்கு இதயம் களியாதே என்று தனியன் கூறுகிறது. கதை இராமாயணம்; கவிஞன் கவிச்சக்கரவர்த்தி. இவ்வாறு நுவலும் பொருள்ாலும் துவலும் படைப்பாளி யாலும் இரட்டைச் சிறப்புக் கொண்டது இராமாவதாரக் காப்பியம்.எனவே, திறனாய்வுச்சக்கரவர்த்தியாகிய அசஞர். கற்றனைத்து ஊறும்,அறிவினராதலால், நவில்தொறும் நயும் நீண்டு, முறைப்படக் சூழ்ந்து முடிவிலவே செய்வர் என்பதற்கேற்பக் கம்ப ராமாயண்ம் பற்றிப் புதிய நூல் ஒன்றை வழங்குகிறார். முடிவிலவே செய்பவ ராதலின் ஜே 鷺" குறித்து நூல்கள் வழங்குவர் என் பார்க்கலாம். அள்ள அள்ளக் குறையா வளம் த்ர் வல்லது கம்ப ராமாயணம்; ஆய்வு முயற்சியில் அலுப்பறியாதவர் அசஞா. - - -