பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அசஞானசம்பந்தன் 7. "துரமொழி மடமான்” என்றும் சொற்றொடர்களை அடுக்கி அப் பாத்திரத்தைப் புதிய கோணத்தில் பார்க்குமாறு செய்து விடுகிறான். கன்யா சுல்கக் கதையை அவன் கையாண்ட விதம் ஈடு இணையற்றதாகும். இது போன்ற பல சிறப்புக்களைக் கொண்டது கம்பனுடைய இராம காதை, ஒவ்வொரு காண்டத்திலும் சிறந்த பகுதிகளை ஒரளவு எடுத்து விளக்குவதே இக் கட்டுரையின் நோக்கம் ஆகும். தனித்தனியாக ஒவ்வொரு காண்டத்திற்கும் எழுதப்பெற்ற முன்னுரைகளின் தொகுப்பே ஆகும் இந்நூல் என்றாலும், அவை அனைத்தையும் ஒன்றுசேர்த்துத் தனி நூலாக வெளியிடும்பொழுது சிற்சில மாற்றங்கள் தேவைப்பட்டன. அம்மாற்றங்களுடன் இந்நூல் வெளிவருகிறது. . கிட்கிந்தா காண்டக் கட்டுரையில் வாலியின் வளர்ச்சி பற்றி விரிவாக ஆராயப்பெற்றுள்ளது. ஒரே பாத்திரத்தைப் பற்றிப் பல்வேறு கோணங்களில் நின்று ஆயும்பொழுது கூறியது கூறல் என்ற குற்றம் வந்தே தீரும்; படிப்போர் அதனைப் பொறுத்தருள வேண்டுகிறேன். கோவை கம்பன் அறநிலையத்தார் இப்பணியை எனக்கு இட்டதாலும் என் மாணவர் டாக்டர் ம.ரர். போ. குருசாமியின் தூண்டுதலாலும் தான் இந்நூல் வெளிவருகிறது. அவர்கட்கு என்னுடைய நன்றியும் வாழ்த்தும் உரியனவாகும். இந் நூலினை மிகச் சிறந்த முறையில் ஆய்வு செய்து முன்னுரை என்ற தலைப்பில் ஒர் அழகிய கட்டுரையே அளித்துள்ள டாக்டர். ம. ரா. போ.குருசாமி அவர்கட்கு என் நல்வாழ்த்துக்கள் உரியதாகும். - . இதனை நல்ல முறையில் அச்சிட்டு வெளியிட்ட என் மாணவரும், பேராசிரியரும், வர்த்தமானன் பதிப்பக உரிமையாளருமான ஜெ. ரீசந்திரன் அவர்கட்கும் என் நன்றி உரியதாகும். . . . . . . சென்னை-83 -- நவம்பர்.96 ஆசிரியன்