பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 கம்பன் எடுத்த முத்துக்கள் மனத்தில் தோன்றவே, அதற்குரிய காரணத்தைச் சிந்தித்ததன் பயன் இக்கட்டுரையில் இடம் பெறலாயிற்று. கிட்கிந்தா காண்டம் என்றுமே பிரச்சனைக்குரிய ஒரு காண்டமாகும். மறைந்து நின்று அம்பு தொடுத்து வாலியைக் கொன்றது நியாயமா என்ற வினா ஆயிரம் வருடங்களாகக் கேட்கப்பட்டே வந்துள்ளது. பக்தி பூர்வமாக இப் பிரச்சினையை அணுகுபவர்கள் இச் செயலில் தவறு காண்பதில்லை. இலக்கிய பூர்வமாக இதனை அணுகுபவர்கள் இராமன் தவறு இழைத்தான் என்று கூறிவருகின்றனர். இவ் இரு சாராரும் இராமனைப் பற்றித்தான் ஆராய்கிறார்களே தவிர வாலியைப் பற்றிச் சிந்திப்பதே இல்லை. இராமன் அம்பு பட்டதால் அவன் வீடு பேற்றை அடைந்தான் என்று கூறுபவர்கள் "வாலி மோட்சம்” என்று இப் படலத்திற்குப் பெயர் சூட்டினர். எதிர்த் தரப்பினர் இராமன் தவறு செய்தான் என்று கருதுப்வர் ஆதலின் "வாலி வதை" என்றே இப்படலத்திற்குப் பெயர் சூட்டினர். இவ் விரண்டுக்கும் இடையே நின்று இராமனை விட்டுவிட்டு வாலியைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். அதன் பயனாக இராமன் கூற்றாக வரும் "நீ இது பொறுத்தி" என்ற தொடருக்கும் "நிரம்புவான் ஒருவன் காத்த நிறை அரசு" என்ற தொடருக்கும் பலருடனும் மாறுபட்டுப் பொருள் காணப்பெற்றுள்ளது. இராம காதையின் பல பகுதிகள் ஆராய்ச்சிக்கும், கருத்து வேற்றுமைக்கும் இடம் தருவனவாகும். வால்மீகியின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும் பொழுதும் அத்தியாத்மா இராமாயணம், ஜைன இராமாயணம் என்பவற்றின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்பொழுதும் கம்பன் செய்த மாற்றங்கள் நம் கருத்தைக் கவர்கின்றன. . . . பாத்திரப் படைப்பில் ஒரு சில இடங்களில் சில சொற்றொடர்களைப் புகுத்துவதன்மூலம் ஏனையோர் படைப்பிலிருந்து தன் படைப்பு மாறுபடுவதைக் கம்பன் வெளிப்படுத்துகிறான்.உதாரணமாகக் கைகேயியையும் அவள் செயல்களையும் கூறும்பொழுது" நாடக மயில்" என்றும்