பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘. ஆசிரியர் முன்னுரை கோவை, கம்பன் அறநிலையத்தார் கம்பனுடைய இராம காதைக்கு, தக்கார் பலரைக் கொண்டு உரைவகுக்க முடிவு செய்தனர். அவ்வுரையாசிரியர் குழுவில் இருந்து கொண்டு பலரும் எழுதுவதை ஒருமுகப்படுத்தும் நெறியாளர் பணியை நான் ஏற்றுக்கொண்டேன். உரை புதியத்ாக வகுக்கப்படுதலின், ஒவ்வொரு காண்டத்திற்கும் பருந்துப் பார்வையாக ஒரு முன்னுரை எழுதப்பட வேண்டும் என்று கம்பன் அறநெறிச் செம்மல் திரு. ஜி.கே.சுந்தரம் விரும்பியதுடன் அப்பணியை நானே மேற்கொள்ள வேண்டும் என்றும் விரும்பினார். ஏனைய உறுப்பினர்களும் இக் கருத்தை ஏற்றுக்கொண்டமையின் ஒவ்வொரு காண்டத்திற்கும் முன்னுரை எழுதத் தொடங்கினேன். ஏற்கனவே கம்பனைப் பற்றிப் பல நூல்கள் எழுதியுள்ளமையின் இப்புதிய பணியில் சில நன்மைகளும், சில சிக்கல்களும் தோன்றின. முன்னர் எழுதியவற்றை விட்டுவிட்டுப் புதிய சிந்தனையில் நாட்டத்தைச் செலுத்தினேன். அதன் பயனாக ஒவ்வொரு காண்டத்திலும் சில புதிய எண்ண ஓட்டங்கள் தோன்றலாயின. பால காண்டத்தில் கோசலத்தை, உடையார் இல்லார் இல்லாத சமுதாயமாக ஏன் படைத்தான் என்ற ஒரு வினாவிற்கு ஒரு விடையும், தர்மகர்த்தாத் தத்துவமும் மனத்திடைத் தோன்றலாயின. - அயோத்தியா காண்டத்தில் வாலாயமாகத் "தீயவள்" என்று பட்டம் சூட்டப் பெற்ற கைகேயியைப் புதிய கோணத்தில் பார்க்கத் தொடங்கினேன். அதன் பயனாக அவள் சமதிருஷ்டி உடைய கர்மயோகி ஆவாள் என்ற கருத்து மனத்தில் வலுப்பெற்று எழுத்துவடிவம் பெறலாயிற்று. ஆரணிய காண்டத்தில் கர துடணன் வதம் பற்றி ஏன் இத்தனை பாடல்கள் பாட வேண்டும் என்ற வினா என்