பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.க.ஞானசம்பந்தன் 151 செய்திலன் எமைத் தே மலர் மேலவன்; எய்தின் எய்தியது ஆக, இயற்றினான். (4046) மணமும் இல்லை, மறைநெறி வந்தன; குணமும் இல்லை, குல முதற்கு ஒத்தன; உணர்வு சென்றுழிச் செல்லும் ஒழுக்கு அலால். நிணமும் நெய்யும் இணங்கிய நேமியாய் (4047) மனித சமுதாயத்தில்கூட அவ்வச் சமுதாயங்கள் உறையும் இடத்திற்கு ஏற்ப ஒழுக்கங்கள் மாறுபடுகின்றன. அப்படி இருக்க, மனித சமுதாயத்தின் நெறிமுறைகளை விலங்குச் சமுதாயத்திற்கு ஏற்றுவது சரியன்று என்ற வாலியின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாமல், விலங்குகளேயாயினும் கற்றறிந்தவர்கள் புத்தேளிரே; எனவே, நீ செய்தது குற்றம்தான்' என்கிறான், இராகவன். இப்போது இவ்வாறு கூறும் இராகவன் வாலி-சுக்கிரீவப் போர் தொடங்குவதற்கு முன்னர்ப் பேசிய பேச்சுகள் வேறானவை யாகும். அண்ணனைக் கொல்லத் துணை தேடிய சுக்கிரீவனை வெறுத்து இலக்குவன் மனம் நொந்துள்ளான். தமையனைப் பார்த்து, 'தன் உடன்பிறந்தவனைக் கொல்ல யமனை அழைத்து வந்திருக்கும் இப்புல்லிய குரங்காகிய இச்சுக்கிரீவன் தஞ்சம் பெறுதற்குத் தகுதியுடையவனோ” (3976) என்று இலக்குவன் கேட்க. அதற்கு விடையாக இராகவன் கூறிய சொற்கள் இப்போது நினைவுகூரத் தக்கன ஆகும். ஐயனே! மனித சமுதாயத்தில் காணப்பட வேண்டிய உறவுமுறையின் சிறப்பை, செய்வதறியாது நினைத்தபடி வாழும் இவ் விலங்குகள் சமுதாயத்தில் ஏற்றிப் பேசுவது முறையாகாது என்ற கருத்தில், அத்தா! இது கேள்' என, ஆரியன் கூறுவான், இப் பித்து ஆய விலங்கின் ஒழுக்கினைப் பேசல் ஆமோ? எத்தாயர் வயிற்றினும், பின் பிறந்தார்கள் எல்லாம் ஒத்தால், பரதன் பெரிது உத்தமன் ஆதல் உண்டோ? - - (3977) என்று கூறுகிறான்.