பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 கம்பன் எடுத்த முத்துக்கள் தீமைதான், பிறரைக் காத்து, தான் செய்தால் தீங்கு அன்று ஆமோ (4018) - தேவியைப் பிரிந்த பின்னைத் திகைத்தனை போலும், - 4. செய்கை. 14020) இரக்கம் எங்கு உகுத்தாய்? என்பால் எப்பிழை கண்டாய்? - அப்பா! (4021) மெலியவர் பாலதேயோ, ஒழுக்கமும் விழுப்பம்தானும்? (4022) аик взяв "இலங்கை வேந்தன் - முறை அல செய்தான்" என்று முனிதியோ? - முனிவு இலாதாய்! 4024) ஒருவர்மேல் கருணை தூண்டி, ஒருவர்மேல் ஒளிந்து நின்று வரிசிலை குழைய வாங்கி, வாய்அம்பு மருமத்து எய்தல் தருமமோ? ....(4025) சூரியன் மரபுக்கும் ஒர் தொல் மறு ஆரியன் பிறந்து ஆக்கினையாம் அரோ (4029) வாலியைப் படுத்தாய் அலை மன் அற வேலியைப் படுத்தாய்-விறல் விரனே! (4031) இங்கே வாலியால் கேடகப்பட்ட வினாக்கட்கு இராமன் மட்டும் அல்ல, யாராலும் விடை கூற முடியாது என்பது உண்மைதான். அடுத்தப்படியாக இராமன் வாலிமேல் சார்த்திய குற்றச்சாட்டுகள் இரண்டு. ஒன்று, அடைக்கலம் என்று வந்த தம்பியை அடித்துத் துன்புறுத்தியது; இரண்டாவது, அவன் மனைவியைச் கவர்ந்தது. இவை இரண்டிற்கும் வாலி கூறும் சமாதானம் பொருத்தமாகவே தோன்றுகிறது. இவற்றுள் தம்பி மனைவியைக் கவர்ந்தது பெருங்குற்றமே என்பதில் ஐயமில்லை. ஆனால், அதற்கு வாலி கூறிய விடையும் சிந்திக்கத் தக்கதேயாம். 'ஐய! நுங்கள் அருங் குலக் கற்பின், அப் பொய் இல் மங்கையர்க்கு ஏய்ந்த புணர்ச்சிபோல்