பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 149 குமாரனைப் பற்றி அவன் கொண்டிருந்த மிக உயர்ந்த எண்ணங்களின் வெளிப்பாடு ஆகும். அந்த நிலையில், தாரையை விட்டுப் புறப்பட்டவுடனேயே தம்பிக்குத் துணைவர்கள் வந்துள்ளார்கள் என்ற செய்தியை அடியோடு மறந்துவிட்டான் வாலி. தம்பியர் அல்லது தனக்கு வேறு உயிர் இம்பரின் இலது என எண்ணி ஏய்ந்தவன். (3969) த்ாரையிடம் இறுதியாக வாலி கூறிய சொற்கள் இவையென்பதை நோக்கும்பொழுது இராகவன் போரின் இடையே சுக்கிரீவனுக்குத் துணையாக வரமாட்டான் என்ற உறுதிப்பாடு (conviction) வாலியின் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. இந்த முடிவுட்ன் போர் செய்கின்ற வாலிக்கு மார்பில் பாய்ந்த அம்பில் இராம என்ற பெயர் பொறிக்கப்ட்டிருந்தது எல்லையற்ற அதிர்ச்சியைத் தந்தது. தன்னால் கோபுரத்தின் உச்சியில் வைத்து வணங்கப்பட்ட இராமன் என்னும் மனிதன் வீழ்ச்சியுற்றுவிட்டானே என்று எண்ணுகிறான் வாலி. இராமனைப்பற்றி அவனுடைய கணிப்பு இப்படி நொறுங்கும் என்று அவன் கனவிலும் கருதவில்லை. இதனால் ஏற்பட்ட மாபெரும் அதிர்ச்சியே வாலியை நிலை குலையச் செய்து விட்டது. தன்னால் பெரிதும் மதிக்கப்பட்ட இராமன் இப்பொழுது மாறிவிட்டதை அவனால் தாங்கவே முடியவில்லை, என்ன செய்வது என்று புரியாத நிலையில், இராமன் மறைந்துநின்று அம்பு எய்ததும் கேலிக்கு இடமாக அமைந்துவிட்டது. தம்பியும் தானும் எதிர்ந்த போரிடை அம்பு இடை தொடுக்குமோ தொடுக்கமாட்டான் என்ற முடிவோடு வந்தவனுக்கு அம்பு இடையே தொடுக்கப்பட்டது முதல் அதிர்ச்சி, அதுவும் மறைந்துநின்று தொடுக்கப்பட்டது இரண்டாவது பேரதிர்ச்சி. இந்த இரண்டு அதிர்ச்சியும் சேர்ந்து வாலியை நிலைகுலையச் செய்து, இவ்விரண்டிற்கும் காரணமான இராமன் எதிர்ப்பட்டவுடன் இருபது (4014 முதல் 4033 முடிய) பாடல்களில் எள்ளி நகையாடச் செய்கிறது. அவற்றுள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வரிகள் மிக இன்றியமையாதவை: -