பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் {53 கொள்ள இயலும், மறைந்துநின்று அம்பு எய்யவேண்டு மென்று இராமன் எப்பேர்தோ முடிவுசெய்து விட்டான். சுக்கிரீவனிடம் பேசிக்கொண்டிருந்த போதே "வேறுநின்று எவ்விடத் துணிந்து அமைந்தது; என் கருத்து இது” (3944 என்று கூறுகிறான். ஆதலால், அண்ணன் தம்பி போர்க் களத்தில் இராகவன் திடீரென்று இம்முடிவிற்கு வந்தான் என்று கூறுவதுபோல இலக்குவன் பேசுவது பொருத்த மற்றதாகும். இராகவன் இவ்வினாவிற்கு விடை கூற முடியாமையால்தான் இலக்குவன் முன்வந்து இந்தச் சமாதானத்தைக் கூறுகிறான். இதனை அடுத்து வரும் பாடலுக்கு உரை காண்பது சற்றுக் கடினமாக உள்ளது. கவி குலத்து அரசும் அன்ன கட்டுரை கருத்தில் - - கொண்டான் அவியுறு மனத்தன் ஆகி, 'அறத் திறன் அழியச் செய்யான் புவியுடை அண்ணல் என்பது எண்ணினன் பொருத்தி, - முன்னே செவியுறு கேள்விச் செல்வன் சென்னியின் இறைஞ்சிச் . . " சொன்னான் (4060) இப்பாடலில், வாலியின் மனமாற்றம் பேசப்படுகிறது. இராமனை இதுவரை இழித்தும் பழித்தும் பேசிக்கொண்டும் விடை கூற முடியாத சங்கடமான வினாக்களைத் தொடுத்தும் இராம-இலக்குவர்க்குப் பிரச்சினையை உண்டாக்கிக் கொண்டிருந்த வாலி, தீடீரென்று மனம் மாறி, இதுவரை தான் சென்ற திசையிலிருந்து நேர் எதிர்த்திசையில் செல்லத் தொடங்குகிறான். - . இப்பாடலின் முதலடியில் வரும் அன்ன கட்டுரை கருத்துள் கொண்டான்' என்ற சொற்றொடருக்கு-கோவைக் கம்பன் அறநிலையப் பதிப்பின் உரை கண்டவர்கள் உள்பட அனைவருமே இலக்குவன் கூறிய சொற்களைக் கருத்துள் வாங்கிக்கொண்டான்' என்றே பொருள் கொண்டனர். இவர்கள் கூறும் பொருளை ஏற்றுக்கொண்டு, வாலியின் வளர்ச்சியைக் காண்பதே பின்வரும் சில பக்கங்களில் பேசப்படும் செய்திகள். . . . - -