பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 கம்பன் எடுத்த முத்துக்கள் இலக்குவன் கூறிய விடையைப் பொருத்தமற்றது என்ற அடிப்படையிலேயே இதுவரை வாலியின் செயல் ஆயப்பெற்றது. அதன் விளைவாகவே, அன்ன கட்டுரை கருத்தில் கொண்டான் என்ற தொடருக்கு இலக்குவன் கூறிய சொற்களைக் கருத்துள் கொண்டான் என்று பிறர் கூறும் பொருளை மறுத்து அன்ன கட்டுரை என்பதை இராமன் கூறிய சொற்கள் எனப் பொருள் கூறப்பெற்றது. இவ்வாறு பொருள் கொள்ளாமல் அன்ன கட்டுரை என்பதற்கு இலக்குவன் கூறிய சொற்கள் என்றே டாக்டர் ம.ரா.போ.குருசாமி கூறியுள்ளார். அவர் கருத்தை ஏற்றுக்கொண்டால் அதற்குரிய விளக்கம் வருமாறு: மார்பில் அம்பு எய்யப் பெற்ற வாலி புறத்தே இராமனை ஏசினாலும் அகத்தே ஞானம் பெற் விரைவாக வளர்கிறான் என்று கூறும் கருத்தை இவரும் ஏற்றுக்கொள்கிறார். அந்த நிலையில் இராமனுடைய அம்பு ஸ்பரிச தீட்சை செய்வித்தது. கார்முகில் கமலம் பூத்து நின்ற வடிவம் நயன தீட்சை செய்வித்தது. இவை இரண்டும் போக வாலியின் செவிகளில் இலக்குவனால் மந்திர தீட்சையும் செய்யப் பெற்றது என்று கூறுகின்றார். இந்த அடிப்படையை ஏற்றுக்கொண்டு இந்த ஆசிரியன் தரும் விளக்கம் வருமாறு: மந்திர தீட்சை என்று கூறியவுடன் ஏதோவொரு குறிப்பிட்ட மந்திரத்தைத்தான் கூறவேண்டும் என்பது பொருளன்று. ஆன்மாவின் பக்குவத்திற்கு ஏற்ப இந்த உபதேசம் எந்தச் சொல்லாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஏனையோரைப் பொறுத்தமட்டில் அச்சொற்கள் வாலாயமாக வழங்கும் பொருளைத் தரலாம். ஆனால் அதே சாதாரணச் சொற்கள் சீடனின் பக்குவத்திற்கேற்ப மந்திரமாக மாறிவிடும். இது ஆன்மீகவாதிகள் அறிந்த ஒன்றாகும். அருணகிரி நாதரைப் பொறுத்தமட்டில் குருவாக வந்த பெருமான் செய்த உபதேசம் "சும்மா இரு, சொல் அற" என்ற நான்கு வார்த்தைகளே ஆகும். சாதாரண மக்களைப் பொறுத்தமட்டில் ஒன்றும் பேசாதே சும்மா இரு என்ற பொருளைத் தரும் இந்த நான்கு சொற்கள் அருணகிரியின் ஆன்மீக வளர்ச்சிக்கு ஒரு பாலமாய்