பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 கம்பன் எடுத்த முத்துக்கள் நாய் என நின்ற எம்பால், நவை அற உணரலாமே? தீயன பொறுத்தி என்றான் - சிறியன சிந்தியாதான். (4061) உலகிடைத் தோன்றிய எல்லா உயிர்களும் எடுத்துக்கொண்ட உடல் காரணமாக அந்தந்த உயிர்களின் மேல் அன்பு செலுத்துகின்றன. செலுத்தப்படும் இவ்வன்பு காரணமாக இந்த உயிர் நற்கதி அடைய வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் அன்பு செலுத்தப்பட வேண்டும். அரும் பாடுபட்டுப் பல பிறவிகளில் தவம் முதலிய பலவற்றைச் செய்து உயிர்க்கு உய்கதி நாட வேண்டிவரும். இதுதான் அனைவரும் அறிந்த வாழ்க்கை முறை. இவ்வாறில்லாமல் சில உயிர்கட்குச் சில் நேரங்களில் ஒர் ஒப்பற்ற வாய்ப்புக் கிடைக்கிறது. எந்தப் பரம்பொருளை அடைய உயிர் பல்வேறு முயற்சிகளைச் செய்கிறதோ அந்தப் பரம்பொருள் அதிர்ஷ்ட வசமாகத் தானே இறங்கிவந்து (அவதரித்து அந்த உயிரின்முன் நிற்கின்றது. இதிலொரு துரதிருஷ்டம் என்னவென்றால், பல பிறவிகளிலும் தான் தேடும் அப்பொருள்தான் இப்பொழுது தன்முன்னே நிற்கின்றது என்பதை அறிய அஞ்ஞானத்தால் மூடப்பெற்ற அந்த ஆன்மாவுக்கு வாய்ப்பில்லாமல் போகின்றது. கிடைத்தற்கரிய இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிட்ட ஆன்மா பின்னர் வருந்துகிறது. “பிற்பால் நின்று. பேழ்கணித்தால் பெறுதற்கரியன் பெம்மானே (யாத்திரைப் பத்து என்று மணிவாசகர் இந்தப் பரிதாப நிலையச் சுட்டிக்காட்டுகிறார். இந்த இக்கட்டான நிலையில் குரு அருள் முன்னின்று எதிரே நிற்பவன் யார் என்பதை விளக்கி, 'உடனே அவனிடம் உன்னை அடைக்கலமாகத் தந்துவிடு' என்று குறிப்பால் உணர்த்துகிறது. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் "அன்பினை உயிர்க்கு ஆகி அடைக்கலம் யானும் என்றி" என்கிறான் இலக்குவன். வாலியின், மறைந்து நின்று கொன்றதேன்? என்ற வினாவிற்கு விடையை எதிர்பார்த்துக் கொண்டு அவனுடைய அறிவும் புறமனமும் நிற்கின்றன. ஆனால் விடை வரவில்லை. அதற்குப் பதிலாக 'யான் உன் அடைக்கலம் என்றி என்ற உபதேசம் வருகிறது. பழைய வாலியாக இருப்பின், என்