பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 157 பொழுது அடைக்கலம் யானும் என்றி, யான் உன் அடைக்கலம் என்று சொல்வாயாக’ என்ற பொருளைத் தந்து நிற்கின்றது. இப்படிச் செய்வதால் அந்த மூலப்பொருளுக்கு நீ ஏதோ உபகாரம் செய்துவிட்டாய் என்று நினையற்க. அடைக்கலமாக உன்னைக் கொடுப்பதால் அந்த மூலப் பொருளுக்கு எவ்வித லாபமும் இல்லை. தந்தது உன் தன்னைக் கொண்டது என் தன்னைச் சங்கரா யார்கொலோ சதுரர் அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன்; யாது நீ பெற்றது என்பால்” (கோயில் 10) என்ற திருவாசகத் தொடர் இங்கு ஒன்று ஒப்பு நோக்கத்தக்கது. அதன் எதிராக முழுப்பயனும் உன் உயிருக்கே வந்து சேரும் என்ற பொருள் படும்படி அன்பினை உயிருக்கு ஆகி' என்ற பொருளில் உயிர்க்கு அன்பினை ஆகி இருக்கவேண்டுவாயானால் யானும் அடைக்கலம் என்றி (என்பாயாக, இவ்வாறு இலக்குவன் கூறிய அடுத்த விநாடியே வாலி சிறியன சிந்தியாதவனாகி முழுவளர்ச்சி பெற்று, சம திருஷ்டி உடையவனாக மாறி ஸ்திதப்பிரக்ளு மனநிலையை அடைந்தவன் ஆகிவிட்டான். மறைந்து நின்று ஏன் அம்பு எய்தாய் என்ற வினாவிற்கு விடை எதிர்பார்க்கும் நிலையில் இப்பொழுது வாலி இல்லை. அந்த வினாவே பொருளற்ற வினாவாக மாறிவிட்டது. இந்நிலையில் அடுத்த பாடலில் வாலியின் சொற்களும் கவிஞனால் பேசப்படுகின்றன். கவி குலத்து அரசும் அன்ன கட்டுரை கருத்தில் - - - கொண்டான்; அவியுறு மனத்தன் ஆகி, 'அறத்திறன் அழியச் செய்யான் புவியுடை அண்ணல் என்பது, எண்ணினன் பொருந்தி, - - முன்னே செவியுறு கேள்விச் செல்வன் சென்னியின் இறைஞ்சி, - சொன்னான். (406) தாய் என உயிர்க்கு நல்கி, தருமமும், தகவும், சால்பும் நீ என நின்ற நம்பி நெறியினின் நோக்கும் நேர்மை