பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f62 கம்பன் எடுத்த முத்துக்கள் சென்னை போன்ற பெருநகரத்தின் நடுவே நிற்கின்ற ஒருவன் வானளாவிய கட்டடங்களையும் காண முடிகின்றது. ஒரே இடத்திலும் அகல நீளங்களிலும் ஒன்றிற்கொன்று முற்றிலும் மாறுபட்டு மனத்தில் வேறுபாட்டு உணர்ச்சியைத் தோற்றுவிக்கின்றது. இரண்டு கட்டடங்களில் ஒன்றை மிக உயர்ந்தது என்றும், மற்றொன்றை மிகக் குட்டையானது என்றும், ஒன்றை நீள அகலங்களில் மிகப் பெரியது என்றும், மற்றொன்றை மிகக் குறுகியது என்றும் அறிகிறோம். இவை அவனுடைய கற்பனை அன்று; உண்மையே ஆகும். ஆனாலும் அதே மனிதன் ஜெட் விமானத்தில் ஏறி நாற்பதினாயிரம் அடி உயரத்தில் பறக்கும்பொழுது இதே கட்டடங்களைக் காண நேர்ந்தால் வியப்படைவான். எல்லாக் கட்டடங்களும் ஒரே உயரமும், ஒரே அகல நீளமும் பெற்றிருப்பதாகத் தெரிவதைக் காண முடியும். முன்னர்க் கண்டதும் உண்மைதான்; இதுவும் உண்மைதான். வேறுபாடு எங்கே நிகழ்ந்தது? தரைமட்டத்தில் இருக்கும்பொழுது காணப்பட்ட வேறுபாடுகள், விமானத்தில் பறக்கும்பொழுது மறைகின்றன. உலகியல் நிலையில் அறிவைமட்டும் வைத்துக்கொண்டு, தன் பலத்தைமட்டும் நம்பி வாழ்ந்து கொண்டிருந்த வாலி, சராசரி மனிதனாவான். அந்நிலையில் அறம் -மறம், நேர்மை-நேர்மையின்மை, நீதி-அநீதி, பகை-நட்பு, பகல்-இருள் என்பவற்றிடையே மிகுந்த வேறுபாட்டை அவனால் காணமுடிந்தது. ஜெட் விமானத்தில் போகின்றவனைப் போல, "உபதேசம் பெற்றுப் பரஞானம் பெற்ற வாலி கற்பனைக்கு அடங்காத அளவு வளர்ச்சி பெற்ற நிலையில் மேலே கண்ட வேறுபாடுகள் மங்கி மறைந்து விடுகின்றன. எனவே, இராம என்ற மந்திரத்தைக் கண்ணுற்றதும், கூர்வாளியால் அறிவு பெற்றதும் நடைபெற்ற பிறகு இராமன் கூறிய சொற்கள் (அன்ன கட்டுரை) கருத்துள் புகுந்தவுடன் முழுமன மாற்றம் ஏற்பட்டுவிடுகிறது. அந்த நிலையில் வாலி பேசத்தொடங்குவது நம்மை அதிர்ச்சி கொள்ளச் செய்கிறது. வாலியின் மனமாற்றத்தை அறிந்துகொள்ளக்கூடிய அளவு நாம் உயர்ந்தாலொழிய நாம் புரிந்துகொள்ள முடியாது. அற வேலியைப் படுத்தாய்', 'பண்பு ஒழிந்தாய்' என்பன போன்ற