பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j/8 கம்பன் எடுத்த முத்துக்கள் இல்லறம் துறந்திலாதோர் இயற்கையை இழந்தும், போரின் வில் அறம் துறந்தும், வாழ்வேற்கு, இன்னன மேன்மை இல்லாச் சில்அறம், புரிந்து நின்ற தீமைகள் திருமாறு, நல்அறம் தொடர்ந்த நோன்பின், நவை அற நோற்பல் - நாளும் (4.137) இப்பாடலில், தான் தவம் மேற்கொள்னவதற்கு இரண்டு காரணங்களைக் கூறுகிறான் இராமபிரான். முதலடியில் முதல் தவற்றைப் பேசுகிறான். இல்லறம் துறந்து துறவை மேற்கொள்ளாமல் இல்லறத்திலேயே இருப்பவர்களின் முதற் கடமை தன்னை நம்பி வந்த மனையாட்டியைக் காப்பதாகும். அதுதான் இயல்பானது. அதைத் தான் செய்யவில்லை என்பதை இல்லறம் துறந்திலாதோர் இயல்பை இழந்தேன்' என்று முதற்கன் கூறுகிறான். இரண்டாவதாக, போரில் வில் அறம் துறந்தும் வாழ்வேன்' என்பதாகும். இதுவரை கர துடனர்கள் வதை தவிர இராகவன் வில்லெடுத்துப் போர் செய்தது வாலியினிடமே ஆகும். கர துட்னர் வதத்தில் வில் அறம் துறக்கும் வாய்ப்பு ஏதும் ஏற்படவில்லை. வாலி வதத்தில்தான் வில் அறம் துறந்து மறைந்து நின்று போரிட வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. அதனைச் செய்தும் வாழ்கின்றேன் என்ற சொற்கள் இராகவன் கழிவிரக்கத்தில் கூறியதாகும். இப்பொருளை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள், 'மனைவியைக் காப்பாற்ற முடியாத வில்லை வைத்துக்கொண்டு இருக்கிறேன்' என்று கழிவிரக்கத்தில் கூறியதாகப் பொருள் கூறுவர். அச்செயலால் தன் கடமை தவறியதைத்தான் குறிக்கிறான் என்று கூறனப்படுமே தவிர, விற்போரில் மேற்கொள்ள வேண்னடிய அறத்தைத் துறந்ததாகக் கூற முடியாது. அன்றியும், வில் அறம் துறந்து வாழ்வேற்கு என்ற சொற்றொடர் கவனிக்கப்பட வேண்டியதாகும். துறத்தல் என்றது தன்வினை; எனவே, துறந்தும் என்ற சொல், 'வில் அறம் எது எனத் தெரிந்தும் வேறு காரணங்களுக்காக அதனை விட்டுவிட்டேன்' என்ற பொருளைத்தான் தரும். ஒரு வீரன் வில் அறம் துறந்து போர்