பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் r 179. செய்யவேண்டிய நிலை வந்தால், அவ்வாறு போர் செய்தால் பின்னர் உயிரை வைத்திருக்கமாட்டான். நானோ இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அதாவது, இல்லறத்தால் இயற்கையை இழந்தது நானே விரும்பிச் செய்ததன்று; அது என்னையும் மீறி நடைபெற்றது' என்ற பொருளில் இயற்கையைத் துறந்தேன்’ என்று கூறாமல் இழந்தேன்' என்று கூறுகிறான் பெருமான், வில் அறத்தைப் பொறுத்தமட்டில் தெரிந்தே செய்தது ஆகலின் துறந்தேன்’ என்று கூறுகிறான். . தன்னொடு செய்த போரில் இராமன் வில் அறம் துறந்தான் என்பது மெய்ஞ்ஞானம் வருவதற்குமுன்னர் வாலி பேசும் பேச்சுகளில் இதே சொறகளில் பேசப்படுவதைக் க்ாணலாம். 'இல்லறம் துறந்த நம்பி, எம்மனோர்க்காகத் தங்கள் வில் அறம் துறந்த வீரன் தோன்றலால், வேத நல் நூல் சொல் அறம் துறந்திலாத சூரியன் மரபும், தொல்லை நல் அறம் துறந்தது என்னா, நகை வர நாண் உட்கொண்டான். (4014) இப்பாடலின் முதலடியில் இராமன் செய்யாததொரு குற்றத்தை இராமன்மீது வாலி ஏற்றுகிறான். இல்லறம் துறந்த நம்பி என்று கூறும்பொழுது வேண்டுமென்றே பிராட்டியைப் பிரிந்தான் என்ற பொருளில் வாலி பேசுகிறான். துறந்த என்ற சொல், தன்வினை யாதலின் இவ்வாறு பொருள் கொள்ள வேண்டும்). இல்லறம் இழந்தேன்' என்று இராகவன் கூறுவதற்கும் இல்லறம் துறந்த என்று வாலி கூறிய பொருளுக்கும் வேறுபாடு அறிய வேண்டும். இராமன்மேல் கொண்ட சினத்தால் இழந்தான் என்று கூறாமல் துறந்தான் என்று கூறுவது அவன் மனநிலையைக் காட்டும். ஆனால், அடுத்து வரும் அடிகள் உண்மையைக் காட்டும். எம் மனோர்க்காகத் தங்கள் வில் அறம் துறந்த வீரன் (4014) என்ற அடியில் உள்ள ஒவ்வொரு சொல்லும் மிகமிக ஆழமான பொருட்சிறப்பைப் பெற்று விளங்கக் காணலாம். எம்மனோர்க்காக என்ற சொல்லினால் இராமன் செயலில்