பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 கம்பன் எடுத்த முத்துக்கள் வாலியைப் பற்றி விரிவாகக் கண்ட பிறகு, அனுமனைப் பற்றி இக் காண்டத்தில் உள்ள அளவிற்குச் சிந்திப்பது பொருத்தமான தாகும். வாலியைப் பொறுத்தமட்டில் வெறும் குரங்காகக் காணப்படும் வான்மீக வாலி, கம்பன் கைபட்டு ஒப்புயர்வின்றி விளங்கக் காண்கிறோம். அனுமனைப் பொறுத்தவரையில் கம்பன் அவனுக்கு ஏற்றிச் சொல்லும் அனைத்துக் குணங்களையும் செயல்களையும் வால்மீகியே ஒரளவு கூறியுள்ளார். என்றாலும், அப்பாத்திரத்திற்கு வான்மீகி தராத புதிய வடிவத்தைக் கம்பநாடன் தருகிறான். தொண்டு, அதாவது உயிர்களுக்குப் பணிபுரிதல் என்றவொரு கொள்கை சங்ககாலம் தொட்டுத் தமிழினத்தில் ஊறி வந்த ஒன்றாகும். தன்னலம் அற்றுப் பிற உயிர்களுக்குத் தொண்டு செய்வதையே தம் குறிக்கோளாகக் கொண்ட இப்பெருமக்களைப் பற்றிக் கூற வந்த புறநானூறு "தமக்கென முயலா நோன்தாள், பிறர்க்கு என முயலுநர் (182) என்று இலக்கணம் வகுக்கின்றது. தொண்டு செய்பவர்களுக்குத் தன்னலம் இருப்பின் தொண்டு செய்ய இயலாது. எனவே, இவர்களைப்பற்றிக் கூறவந்த இப் புறப்பாடல் " இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும், நன்று எனத் தமியர் உண்டலும் இலர்' எனக் கூறுகிறது. அதாவது, தேவர்களுக்குரிய கிடைத்தற்கரிய அமிழ்தமே கிடைத்தாலும்கூடப் பிறர்க்குத் தராமல் தாங்களாகவே அதனை உண்ணமாட்டார்கள். வலிமையான முயற்சியை யுடையவர்கள், உழைக்கவும் செய்பவர்கள். ஆனால், இந்த உழைப்பு, முயற்சி என்றவற்றின் பலன்களைத் தமக்கு என்று கொள்ளாமல் பிறருக்காகவே அர்ப்பணிக்கின்றவர்கள். இவர்களே தொண்டர்கள் என்று புறப்பாடல் கூறுகின்றது. ஆறாம் நூற்றாண்டின் கடைப் பகுதியில் வாழ்ந்த திருநாவுக்கரசர் "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று தொண்டின் பெருமை பேசுகின்றார். தொண்டு வாழ்வே அனுமன் வாழ்வு என்பதைச் சுவாமி விவேகானந்தரும் விளக்கியுள்ளமை இங்கே நினைக்கத் தக்கது. "...கரும வீரமாவது தன்னலம் கருதாது பிறர் நன்மையின் பொருட்டே கருமத்தில் இறங்குதல் என்பர். இவருடைய பக்தி மதுர பாவனை யன்று; அனுமன் காட்டிய பக்தி