பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 181 பேசுகிறான் என்றால், சுத்த வீரனாகிய வாலி இராமனைக் குறைத்து எடைபோடவில்லை. தன் வாயாலேயே வீரன் என்ற அடைமொழியை இராமனுக்குத் தருகின்றான். மனக் கசப்பிலும், சொல்லப்படுகின்ற நிலையிலும், கழிவிரக்கத்திலும் ஒரு சுத்த வீரன் மற்றொரு சுத்த வீரனை மதித்துப் பேசும் இயல்பை வாலியின் கூற்றில் காண்கிறோம். - - இதுகாறும் கூறியவற்றால் வில் அறம் துறந்த வீரன் என்று எந்தப் பொருளில் வாலி கூறினானோ அதே பொருளில் தான் வில் அறம் துறந்து வாழ்வேற்கு என்று இராகவனும் கூறுகிறான் என்பது தெளிவாகும். காப்பிய அமைதியில் பாத்திரப் படைப்பு, உரையாடல், நிகழ்ச்சிகள் அமைப்பு என்பவற்றை வைத்துக்கொண்டு செய்யப்படும் திறனாய்வாகும் இது. இவ்வாறு கூறுவதனால் இராமன் புகழுக்கோ அவன் பரம்பொருள் என்று கூறுவதற்கோ எவ்விதக் குறைபாடும் இல்லை என்பதை அறிதல் வேண்டும். இத்தனையையும் அனுமன் கூற்றாகக் கவிதையில் கூறிய கம்பநாடனே "மூலமும் நடுவும் ஈறும் இல்லது. ஒர் மும்மைத்து. ஆய, காலமும் கணக்கும் நீத்த காரணன், கைவில் ஏந்தி அயோத்தி வந்தான்" (5884) என்று கூறுவதால் இராமன் புகழுக்கு இத்திறனாய்வு எவ்வித இழுக்கையும் தராது என்பது தெளிவு. மேலும் கவிஞனே இராமன் பரம்பொருள் என்பதை 'வான்நின்று இழிந்து வரம்பு இகந்த மாபூதத்தின் வைப்பு எங்கும் ஊனும் உயிரும் உணர்வும் போல் உள்ளும் புறத்தும் உளன் என்று அயோத்தியா காண்டக் கடவுள் வாழ்த்திலும், "அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு என, பூதம் ஐந்தும் விலங்கிய விகாரப்பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம் கலங்குவது எவரைக் கண்டால்? அவர் என்பர் கைவில் ஏந்தி இலங்கையில் பொருதார் அன்றே மறைகளுக்கு இறுதி ஆவர்" என்று சுந்தர காண்டக் கடவுள் வாழ்த்திலும் குறித்தவாறு காண்க w - கிட்கிந்தா காண்டத்தில் உலக மகா காப்பியங்களில் காணப்பெறாத காண முடியாத இரண்டு பாத்திரங்கள் பேசப்படுகின்றன. ஒன்று, அனுமன், இரண்டாவது வாலி,