பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 கம்பன் எடுத்த முத்துக்கள் அனுமன் செய்தான் என்பதை அடுத்த பாடலில் கவிஞன் கூறும் துண்மையான வாதம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. துன்பினைத் துடைத்து, மாயத் தொல்வினை தன்னை - நீக்கி, தென்புலத்து அன்றி மீளா நெறி உய்க்கும் தேவரோ தாம்? (3763) இந்த முடிவுக்கு அனுமன் எவ்வாறு வருகிறான்? தம்மை அடைந்தவரின் துன்பங்களைப் போக்கி, அத்துன்பங்களின் மூலமான பழ வினைகளைப் போக்கி, சாதாரணமாக இறந்து எமலோகம் சேராமல் மீண்டும் பிறவாத வீடுபேற்றை நல்க வல்லவர்கள் என்பதே இவ் அடிகளின் பொருளாகும். இது கொஞ்சம் விந்தையான முடிவே ஆகும். இங்குக் கூறப்பட்ட, செயல்களைச் செய்ய வல்லவன் பரம்பொருள் ஒருவனே யன்றி, இந்திரன் முதலிய தேவர்களாலும் இயலாது என்பதை அறிதல் வேண்டும். அப்படியிருக்க எதை வைத்துக் கொண்டு பேரறிஞனான அனுமன் இந்த முடிவுக்கு வருகிறான்? அவன் கண்டதாக முன் பாடல்களில் கூறப்பட்டுள்ள மெய்ம்மைகள் அனைத்தும் மனிதருள் தலைசிறந்த மாமனிதர்கள் என்ற முடிவிற்கு வரவைத்ததே தவிர, அவர்களைப் ப்ரம்பொருள் என்று நினைப்பதற்கு எவ்வித ஆதாரமும் தரவில்லை. புறத்தே நிகழும் இந் நிகழ்ச்சிகளை மட்டும் வைத்துக்கொண்டு பரம்பொருள் என்று முடிவிற்கு வருவது ஆதாரம் அற்றதாகும். ஆனாலும், அம் முடிவுக்கு அனுமன் வந்துவிட்டான் என்று கூறியவுடன், நம் மனத்தில் எழும் ஐயத்தைப் போக்க இப்பாடலின் பின்னிரண்டு அடிகளில் கவிஞன் விடை கூறுகிறான். இவர்கள் பரம்பொருள்; மானிட வடிவம் தாங்கிய பரம்பொருள் என்ற முடிவிற்கு அனுமன் வந்த காரணம் இதோ வருகின்றது: என்பு எனக்கு உருகுகின்றது. இவர்கின்றது அளவு இல் - - - . . ." காதல்; அன்பினுக்கு அவதி இல்லை; அடைவு என்கொல்? அறிதல் தேற்றேன் (3763) ஒர் ஆன்மாவின் எதிரே பரம்பொருள் காட்சி அளிக்குமே யானால் என்பு உருகுதலும், மனத்தில் அளவில்லாத காதல்