பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 187 வளர்தலும் இரண்டுமே இலக்கணங்கள் ஆகும். இந்த விளக்கத்தை அனுபவ ஞானிகளாகிய மணிவாசகர் போன்றோரின் நூல்களில் பரக்கக் காணலாம். "அற்புதமான அமுத தாரைகள், எற்புத் தொளைதொறும் ஏற்றினை ஏற்றினை" (திருவாசக்த் திருவண்ட, 174 என்பது திருவாசகம், மறைந்து நின்று துர்த்தில் கண்டபோதேகூட இராகவன் யாரென்பதை அறிவாலும் உணர்வாலும் அறிந்துகொண்டான் அனுமன் என்கின்றான் கவிஞன். இந்தப் பர ஞானம், அனுபவத்தின் வெள்ளம் அனுமனுடைய முகத்திலும் படர்ந் திருக்க வேண்டுமென்று நினைய வேண்டியுள்ளது. கண்ட சில மணித்துளிகளிலேயே அனுமனை எடை போட்டு "நாட்படா மறைகளாலும், நவைபடா ஞானத்தாலும், கோட்படாப் பதமே ஐய! குரக்கு உருக் கொண்டது" (3783) என்று பரம்பொருளின் அவதாரமாகிய இராகவனே சான்றிதழ் வழங்குகிறான் என்பதையும் கருத வேண்டும். இவ் அனைத்தும் நடைபெற்றிருக்கக் கூடிய நேரம் சில மணித்துளிகளே ஆகும். தொண்டன் பரம்பொருளையும் பரம்பொருள் தொண்டனையும் - இனங் கண்டுகொள்கிற மாபெரும் நிகழ்ச்சி, நடைபெற்று முடிந்துவிடுகிறது. இந் நிகழ்ச்சிகளில் மற்றொரு புதுமையையும் காண முடிகின்றது. பக்தன் இறைவனைக் கண்டு உணர்வதையும் இறைவன் பக்தனை அறிந்துகொள்வதையும் பக்கத்தில் நிற்பவர்கள்கூட அறிந்துகொள்ள இயலாது. இராமனை யாரென்று நன்கு அறிந்திருந்த இராமானுஜனாகிய இளைய பெருமாள்கூட அனுமனை யாரென்று அறியவில்லை; அறிந்து கொள்ள முயலவும் இல்லை. இச்சிறு வடிவினன் உலகுக் கெல்லாம் ஆணி, கோட்படாப் பதம் என்றெல்லாம் இராகவன் கூறியும்கூட இலக்குவன் கணிப்பில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. அதனை அறிந்த இராகவன் 'வில்லார் தோள் இளைய வீர! (3768) என்று விளித்து, அவனை இடித்துரைக்கும் முறையில், இவன் பெருமையை நான் அறிந்துகொண்டேன். நீ அறிந்துகொள்ள முற்பட வில்லை. போகப்போக அறிந்துகொள்வாய்' என்னும் வகையில், :