பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 கம்பன் எடுத்த முத்துக்கள் புலனடக்கம் முற்றிலும் கைவரப் பெற்றவன் - ஐந்தவித்து அதனால் பெறும் ஆற்றலையும் பெற்றிருந்தவன் அனுமன். பதினொரு பாடல்களில் அனுமனின் ஆற்றலை அவனுக்கே நினைவூட்டிய சாம்பன் மிக நுண்மையான கருத்தை ஒரு பாடலில் வைத்துப் பேசுகிறான்: நீதியில் நின்றீர் வாய்மை அமைந்தீர்; நினைவாலும் மாதர் நலம் பேணாது வளர்ந்தீர்; மறை எல்லாம் ஒதி உணர்ந்தீர்; ஊழி கடந்தீர்; உலகு ஈனும் ஆதி அயன்தானே என யாரும் அறைகின்றீர் (4725), வரம்பிகந்து, மதுவிலும் மாதர்களிடத்தும் பொழுதைக் கழிக்கும் இலங்கைக்கு ஒரு பெண்ணைத் தேடிச் செல்பவனுக்குப் புலனடக்கம் தேவை என்பதைச் சாம்பன் அறிவுறுத்துகிறான். "நினைவாலும் மாதர் நலம் பேணாது வளர்ந்தீர்" என்ற தொடர் இதுவரை நாம் கண்டிராத அனுமனின் பண்பாட்டின் ஒரு பகுதியை, மிக இன்றியமை யாத பகுதியை எடுத்துக்காட்டுகிறது. கிட்கிந்தா காண்டத்தில், இறுதியில் வரும் படலத்தில் வரும் இப்பாடல் சுந்தர காண்டம் முழுமையும் ஆக்கிரமித்திருக்கும் அனுமனைப் பற்றிய முன்னுரையாக அமைகிறது. இவ்வாறு விலங்கு வடிவங் கொண்ட இரண்டு பாத்திரங்களை ஈடு இணையற்ற முறையில் படைத்து உலகக் காப்பியங்களுள் வேறு எங்கும் காணமுடியாத சிறப்பினைத் தனதாக்கிக் கொண்டான் கம்ப நாடன். - -