பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 195 இராவணனிடம் நெருங்கிய தொடர்புடைய வாலியைக் கொன்றால் ஒழியக் காப்பிய நோக்கம் நிறைவேறாது. இந்த மாபெரும் தடையை அதாவது வாலி வதை வாயிலாக நிகழச் செய்தவன் அனுமனேயாவான். வாலி என்பவன் யார் என்று தெரியாத இராமனை இவ்வதத்தைச் செய்யுமாறு தன் அறிவின் திறத்தாலும் சூழ்ச்சியாலும் தூண்டியன் அனுமனே ஆவான். இம் மாபெரும் திட்டத்தைத் தன் அறிவின் துணைக் கொண்டு தீட்டி, காலம், இடம் என்பவற்றை நுண்ணிதின் தேர்ந்து அத்திட்டத்தைச் செயற்படுத்தியவன் அனுமனே ஆவான் என்பது இதுகாறும் கூறியவற்றால் நன்கு விளங்கும். கம்பநாடன் கருத்தும் இதுவேயாகும் என்பதை - 'அறிந்து திறத்து ஆறு எண்ணி அறத்து ஆறு அழியாமை மறிந்து உருளப் போர் வாலியை வெல்லும் மதி வல்லீர்; (4723) என்ற பாடல் அறிவுறுத்துகின்றது. நாலா திசைகளிலும் பிராட்டியைத் தேடப் பலர் அனுப்பப்படுகின்றனர். ஆனால், பிராட்டியைக் கொண்டு சென்றவன் இராவணன் என்பதால் கவிஞரின் அறிவுமிக்க அனு மனைத் தேர்ந்தெடுத்துத் தென் திசைக்கு அனுப்புகின்றனர். பல்வேறு வீரச் செயல்களைச் செய்துகொண்டு அனைவரையும் அழைத்துக்கொண்டு மயேந்திரமலைமீது தங்குகிறான் அனுமன். கடலைக் கடப்பது யார் என்ற வினாத் தோன்றிய பொழுது "தன் பெருமை தான் அறியாத் தன்மையினானாகிய மாருதிக்குச் சாம்பன் அவனுடைய பெருமையை எடுத்துக் கூறுகிறான். விண்ணில் சஞ்சரிக்கும் ஆற்றலை வாயுவின் மைந்தன் பெற்றுள்ளான் என்பது உண்மையே. ஆனால், இராவணன் முதலானோர் பெற்ற ஆற்றலைத் தவறான வழியில் சென்று பாழாக்கியது போன்று மாருதி தன் ஆற்றலை, வலிமையை வீணடிக்க வில்லை. ஒர் ஆன்மா கீழே இழுக்கப்படாமல் மேலே செல்ல வேண்டுமென்று விரும்பினால் அது கைக்கொள்ள வேண்டிய முதற்பணி - முக்கியப் பணி புலன் அடக்கமாகும். அந்தப்