பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 - கம்பன் எடுத்த முத்துக்கள் அறிந்துகொள்ளாதவன் சுக்கிரீவன். ஆனால், சுக்கிரீவனுக்கும். அனுமனுக்கும் பகையாகிய வாலியோ அனுமனையும் அவனது ஆற்றலையும் அறிந்திருந்தான். அனுமனை இராமன் அறிந்ததுபோல இராமகாதையில் அனுமனை அறிந்த வேறொருவன் உண்டென்றால் அது வாலியே ஆவான். அதனால்தான், தன் இறுதிக் காலத்தில் தன்னைக் கொன்றவ னாகிய இராமனை நோக்கி, "உனக்குத்துணைபுரிய வந்துள்ள அனுமனைச் சாதாரணமானவன் என்று நினைத்து விடாதே. நின்செய்ய செங்கைத் தனு என நினைதி (407) என்று அறிமுகம் செய்துவைக்கிறான். இராமனின் கோதண்டம் அனைவரும் அறிந்த பேராற்றல் உடையது என்றாலும், இராமன் கையிலிருக்கும்போதுதான் அது அவன் விருப்பப்படி பணிபுரிய முடியும். அனுமன் என்றால் இராமனை விட்டுப் பிராட்டியைத் தேடிக்கொண்டு நீண்ட தூரம் சென்றுகட்டப் பெரும்பணி புரியும் பேராற்றல் உடையவன்; எனவே, நின்று பணிபுரியும் செங்கைத் தனுவைவிட் நின்றும் சென்றும் பணிபுரியும் அனுமன் ஒருபடி உயர்ந்தவன் என்று சொல்லாமல் சொல்லிக்கொள்கிறான் வாலி. கிட்கிந்தா காண்டத்தில் கலன்காண் படலம் தவிர எல்லாப் படலங்களிலும் அனுமனைச் சந்திக்கின்றோம். அனுமன் அரும்பாடுபட்டு வாங்கித் தந்த அரசையும், சுக்கிரீவ்ன் பூவியல் நறவம் மாந்திப் புந்தி வேறு உற்று' இழக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. 'கார்காலம் முடிந்தவுடன் படையுடன் வருகிறேன்' என்ற வார்த்தைகளை மறந்து மதுமயக்கத்தில் கிடக்கின்றான் சுக்கிரீவன். இராமன் ஏவலால் புயல் போலச் சீறி வரும் இலக்குவனைச் சந்திக்க யாருக்கும் நெஞ்சுரமோ சூழ்ச்சியோ இல்லை. கைம்பெண் கோலத்தில் தனியே வாழ்ந்துவரும் தாரையை அனுப்பி, இலக்குவன் கோபத்தைத் தணித்து இரண்டாம் முறையாகச் சுக்கிரீவன் உயிர் பிழைக்குமாறு செய்தவன் அனுமனே ஆவான். - இராவண வதந்தான் காப்பிய நோக்கம் என்றால், அது நிறைவேற ஒரு மாபெரும் சிக்கல் இடையே உள்ளது.