பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 கம்பன் எடுத்த முத்துக்கள் வரிசைப்படுத்தி நினைவூட்டுகிறான். (4719 - 4729) இந்த நிலையிலும் அடக்கத்தின் உறைவிடமாக உள்ள அனுமன் சாம்பவனை நோக்கி, - இற்றை நும் அருளும், எம் கோன் ஏவலும், இரண்டு பாலும் கற்றை வார் சிறைகள் ஆக, கலுழனின் கடப்பல் காண்டிர் (4734) என்றான். 'கருடனைப் போலக் கடப்பல்' என்ற உவமையே அனுமனின் மனநிலையை நன்கு அறிவிக்கின்றது. கருடனின் இரு சிறகுகள்போல, உடன்வந்தவர்களின் அன்பும், இராகவனின் ஏவலும் உள்ளன என்பது இவ் உவமையால் கிடைக்கின்ற பொருள். இவை இரண்டும் சிறகுகளாயின், அனுமன் கருடனாக ஆகிவிடுகின்றான். கருடன் மேல் எப்போதும் செல்பவன் திருமாலாதலின் கடலைத் தான் கடந்தாலும் தன்னைக் கடக்குமாறு செலுத்துபவன் திரும்ாலே என்று உணர்ந்து அனுமன் பேசுகிறான் என்பதை இவ்வுவமை நினைவூட்டும். - இராமனை முதன்முறை காணும்பொழுதும், அவனுடன் இருக்கும்பொழுதும் சாதாரண வடிவுடன் இருந்த அனுமன், இப்பொழுது அவன் ஏவலைத் தாங்கி அவன் திருவடிகளை மனத்துட் கொண்டு அவனுடைய திருநாமத்தை உச்சரித்துக் கொண்டிருப்பதால் வளரத் தொடங்குகிறான். இப்பொழுது அவன் எடுக்கின்ற விசுவரூபம் சுந்தர காண்டம் முழுவதும் வியாபித்துநிற்கிறது. சாதாரணக் குரங்கு உருவத்தைச் சுந்தர வடிவம் என்று யாரும் கூறமாட்டார்கள் இப்பொழுது இராகவன் அருளை முற்றிலும் பெற்று யான்', 'எனது' என்ற அகங்கார மமகாரங்களை அறவே நீக்கியபொழுது அக்குரங்கு உருவே அழகிய வடிவமாகக் காட்சி தருகின்றது. 'யாது ஒன்று நினைக்கத் தான் அதுவாதல் உயிர்கட்கு இயல்பு என்று சைவ சித்தாந்தம் பேசும். அழகின் எல்லையாக உள்ளவன் இராமன்." அந்த இராம செளந்தரியம்” என்று அருணாசலக் கவி பாடுகின்றார். எனவே, இராம செளந்தரியத்தில் முற்றிலுமாகத் தன்னை ஆட்படுத்திக்கொண்ட அனுமனும்