பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 199 அகத்திலும் புறத்திலும் அழகனாக (செளந்தர்யனாக) மாறுவதில் வியப்பொன்றுமில்லை. வான்மீகியின் சுந்தர காண்டத்திற்கு விளக்கம் எழுதியவர்கள் பக்தி செளந்தரியம், வீர செளந்தரியம் என்ற இரண்டும் நிறைந்தமையின் அனுமன் ‘சுந்தரன்’ எனப்பட்டான் என்று கூறுவார்கள். எனவே, சுந்தர காண்டத்தின் பெயர்ப் பொருத்தத்தை ஒருவாறு அறிய முடியும். மன்னன் மகளாகத் தோன்றி ஒரு மன்னனை மணம் புரிந்து அரண்மனையில் வாழ்ந்த பிராட்டியின் அழகை முதலிரண்டு காண்டங்களில் கண்டோம். சிறையெடுக்கப் பட்டு அசோகவனத்தில் எவ்விதத் துணையுமின்றி அல்லற்பட்ட நிலையில் அவளுடைய செளந்தரியம் என்ன ஆயிற்று என்று கேட்பவர்க்கு விடை கூறுகிறான், அவளை நேரே கண்ட அனுமன். முழு அலங்காரங்களோடு இருந்த பிராட்டியைத்தான் இராமன் அறிவான். காட்டிடை வாழ்ந்தபோது ஒருசில அணிகளுடன் பிராட்டி இருந்தாளேனும் அவள் அழகிற்கு எவ்விதக் குறையும் இல்லை. இவ் அணிகள் பூண்டிருந்த காலத்திலும் அவை பிராட்டிக்கு அழகு சேர்க்காமல் அவள் அழகை மற்ைக்கவே பயன்பட்டன என்பதையும் கம்பநாடன் உமிழ் சுடர்க் கலன்கள், நங்கை உருவினை மறைப்பது ஒரார் (1119) என்ற அடியில் குறிப்பிடுகிறான். இத்துணை அழகையும் இராகவன் கண்டிருப்பினும் பிராட்டியிடம் அவன் கண்டிராத ஒர் அழகைத் தொண்டனாகிய அனுமன் காணுகிறான். 'தவம் செய்த தவமாம் தையலின் அழகை இராகவன் "காண நோற்றிலன் கமலக் கண்களால்" (514) என்று அனுமனே பேசுகிறான். சீதையினுடைய வடிவழகை ரூப செளந்தரியம் என்பர் வடமொழியாளர். அசோகவனத்திற்கு வருகின்றவரை அவள் தவத்தை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டதே இல்லை. ஆனால், அசோகவனத்தில் இராகவனைப் பிரிந்து பிராட்டி இருக்கும்பொழுது தவம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று. அதன் விளைவாக அற்புத ரூப செளந்தரியம் அவளிடம் தோன்றலாயிற்று. அதனைக் காணும் பேறு பெற்றவன் அனும்ன் ஒருவனே யாவான். அந்தத் தவ