பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 கம்பன் எடுத்த முத்துக்கள் செளந்தரியத்தை மனத்தில் கொண்டுதான் அவளைப் பற்றி இராகவனிடம் பேசும்போது தவம் செய்த தவமாம் தையல் என்று பேசுகிறான். பிராட்டியிடம் தவ அழகு மிளிர்ந்தது என்றால் அவளைக் காத்து நின்ற அரக்கியர்களும் தவறான எண்ணத்துடன் அவளிடம் பேசவந்த இராவணனும் ஏன் இதனைக் காணவில்லை என்ற வினாத் தோன்றுவது இயல்பே. இராவணனைப் பொறுத்தமட்டில் வடிவழகைமட்டும் கண்டானே தவிரத் தவ அழகைக் காணவில்லை. காரணமென்ன? தவம் என்றால் புலனடக்கம் என்று பொருள் கொள்ளலாம். புலனடக்கம் இல்லாதவர்கள் தவம் செய்யவும் முடியாது. தவத்தால் தோன்றும் அழகைக் காணவோ, அறியவோ, தெளியவோ, உணரவோ முடியாது. பிராட்டியின் தவ் அழகை இராவணன் காண முடியாமைக்குக் காரணம்: புலனடக்கம் என்பது அவனிடத்தில் இல்லை. புலன்களின் வெறியாட்டத்தில் சிக்கிச் சுழல்பவன் அவன். எனவே, அவனால் பிராட்டியின் வடிவழகைக் கடந்த தவ அழகைக் காணும் வாய்ப்பே இல்லை. அனுமனைப் பொறுத்த மட்டில் புலனடக்கத்தின் மொத்த உருவாக வாழ்ந்தவ னாதலின், பிராட்டியின் வடிவழகைக் காணாது தவ அழகையே கண்டான். அதனாலேயே 'தவம் செய்த தவமாம் தையல்' என்று கூறுகிறான். சுந்தர காண்டத்தின் 14 படலங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் அனுமன் வீர செளந்தரியம், பக்தி செளந்தரியம், புலனடக்கச் செளந்தரியம் ஆகிய மூன்றும் மிளிரும் சுந்தரனாகக் காட்சியளிக்கிறான். பிராட்டியைப் பொறுத்தவரை காட்சி, உருக்காட்டு, சூடாமணி ஆகிய மூன்று படலங்களில் தவ செளந்தரியத்துடன் காணப்படுகிறாள். எனவே, இக்காண்டம் சுந்தர காண்டம் என்று பெயர் பெறுவதற்கு முறையே அனுமனும் பிராட்டியும் காரணமாகின்றனர். * . . . . . . சுந்தர காண்டம், கடல் தாவு படலத்தில் தொடங்கித் கிருவடி தொழுத படலத்தில் முடிகின்றது. இந்தப் பெயர்